ஆசிய கோப்பை 2023 : 712 விக்கெட்ஸ் எடுத்து என்ன பயன்? இந்திய அணியில் அஸ்வின் சரியா நடத்தப்படல – 2 முன்னாள் வீரர்கள் விமர்சனம்

Rohit-and-Ashwin
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் காயத்தை சந்தித்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய அணியை பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

- Advertisement -

அத்துடன் ஆசிய கோப்பையில் அசத்துபவர்களில் இருந்து தான் உலகக் கோப்பையில் விளையாடப்போகும் 15 பேர் கொண்ட இந்திய அணியும் தேர்வு செய்யப்பட உள்ளது. அந்த நிலையில் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகாத போதிலும் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் அனைவருமே இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருப்பதால் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற கட்டாயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

சரியா நடத்தப்படல:
மேலும் ஆசிய கண்டத்தின் சூழ்நிலைகளில் அசத்தக்கூடிய அஸ்வின் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பார் என்பதால் தாமாக இருந்தால் நிச்சயம் தேர்வு செய்வேன் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத அஸ்வின் 2023 உலகக்கோப்பையிலும் கழற்றி விடப்படுவார் என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக அசத்தி 2011 உலகக்கோப்பை, 2023 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவரை நாளடைவில் வெளிநாடுகளில் சரிப்பட்டு வர மாட்டார் என்ற கண்ணோட்டத்துடன் விராட் கோலி கழற்றி விட்டதை தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவும் பின்பற்றி வருகிறார்.

Karsan Ghavri

 

- Advertisement -

அதன் உச்சமாக தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் வீரர் கர்சன் கர்வி கூறியுள்ளார். குறிப்பாக 712 விக்கெட்கள் எடுத்து ஜாம்பவானாக இருந்தாலும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சரியாக மதித்து நடத்தப்படுவதில்லை என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“712 சர்வதேச விக்கெட்களை எடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் எதை நிரூபிக்க வேண்டும்? சீனியர் வீரராக இருந்தும் அவர் இந்திய அணியில் சிறப்பாக மதிக்கப்படுவதில்லை. நல்ல தரமான வீரரான அவர் இந்த ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக இந்திய மைதானங்களில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையில் அவர் முக்கிய வீரராக இருப்பார்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் 1983 உலகக்கோப்பையை வென்ற முன்னாள் இந்திய வீரர் மதன் லால் இது பற்றி விமர்சித்தது பின்வருமாறு.

- Advertisement -

Madan-Lal

“ஆஸ்திரேலியா குல்தீப் யாதவை சிறப்பாக எதிர்கொண்டனர். அதனால் மேட்ச் வின்னிங் பவுலரான சஹால் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். அதே போலவே 500 – 600க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்துள்ள அஸ்வினுக்கு எப்படி முக்கிய தொடர்களில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். அப்படி இருந்தும் அவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஏன் எடுக்கவில்லை என்பதை அணி நிர்வாகம் தான் அறிவார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆசியக்கோப்பை : அணியில் இடம்பெறாத அன்லக்கி பெஸ்ட் பிளேயிங் லெவன் 11 – லிஸ்ட் இதோ

அப்படி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த ஆஃப் ஸ்பின்னராக சாதனை படைத்தும் இதுவரை இந்திய அணியில் அஸ்வினுக்கு விளையாடும் 11 பேர் அணியில் கூட நிலையான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது தமிழக ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஓய்வுக்கு பின் ஏன் பேட்ஸ்மேனாக இல்லாமல் பவுலராக வந்தோம் என்று நினைத்து வருந்து போவதாக அஸ்வின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement