- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுல சொதப்புவதால் அவருக்கு சான்ஸ் கொடுக்கலாம், ரிஷப் பண்ட் – டிகே ஆகியோரில் கபில் தேவ் ஆதரவு யாருக்கு

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையின் இந்தியா இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது. இதை தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெறும் 3வது கிரிக்கெட் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை சுவைத்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்யப் போராட உள்ளது.

முன்னதாக இந்த உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே காணப்பட்ட நிலையில் அறிமுகமானது முதல் 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பைப் பெற்றாலும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை ஒருமுறை கூட சிறப்பாக செயல்படாத ரிசப் பண்ட்டுக்கு பதிலாக ஒரு கட்டத்தில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து அசத்தலாக செயல்படும் தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆசிய கோப்பையில் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் ரிஷப் பண்ட் வழக்கம் போல ஏமாற்றியதாலும் வெற்றியை தீர்மானிக்கும் 10 – 15 ரன்களை எடுக்க தவறி தோல்வியை சந்தித்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தடுமாறும் டிகே:
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தமான முதல் போட்டியில் கடைசி ஓவரில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் பினிஷிங் செய்யாமல் வழக்கம் போல சொதப்பி ஒய்ட் பந்தில் அவுட்டாகி இந்தியாவின் வெற்றியை தாரைவார்க்க பார்த்தார். ஆனால் அதற்கடுத்த பந்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அஷ்வின் செய்து காட்டிய நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான 2வது போட்டியில் எளிதான ஸ்டம்ப்பிங்கை தினேஷ் கார்த்திக் தவறவிட்டது நிறைய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் இது போன்ற சிறுசிறு விஷயங்கள் தான் வெற்றியை தீர்மானிக்க கூடியதாகும்.

அத்துடன் மிடில் ஆர்டரில் அனைவரும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதால் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழக்கும் நேரங்களில் அக்சர் பட்டேலை அனுப்ப வேண்டியுள்ளது. அதனால் ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் “காபா” போன்ற அழுத்தமான போட்டியில் அபாரமாக விளையாடி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிஷப் பண்ட்டுக்கு மீண்டும் வாய்ப்பளிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. அத்துடன் அவர் தினேஷ் கார்த்திக்கை விட விக்கெட் கீப்பிங் செய்வதில் சிறந்தவராகவும் உள்ளார்.

- Advertisement -

அதையே சுட்டிக்காட்டும் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் விக்கெட் கீப்பிங் மற்றும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத குறையை போக்க ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிப்பது நல்ல முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் அணியில் இருப்பதால் இந்தியாவுக்கு அவர் தற்போது தேவை என்று நான் சொல்ல விரும்புகிறேன். ஆரம்பத்தில் தினேஷ் கார்த்திக் அந்த வேலையை செய்து விடுவார் என்று தோன்றியது. ஆனால் விக்கெட் கீப்பிங்கை பொறுத்த வரையும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தாலும் ரிசப் பண்ட் இருந்தால் இந்திய அணி முழுமையடையும் என்று நான் கருதுகிறேன்”

“அவர் தெளிவான வீரர். அவருடைய பேட்டிங்கை பார்த்தால் அவர் எப்போதும் தடுமாறுவதாக உங்களுக்கு தோன்றாது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஒருசில போட்டிகளில் அவர் அவுட்டானார். இருப்பினும் வாய்ப்பை பெற்று அவர் ரன்கள் அடிப்பதை நான் விரும்புகிறேன். சில வீரர்கள் அவரை வேகமாக விளையாட வேண்டாம் என்று கூறுகின்றனர்”

இதையும் படிங்க: பகவத் கீதை போல பேட்டிங் கலையை காமிச்சாரு – கிங் கோலியை வியந்து பாராட்டும் ஆஸி முன்னாள் வீரர்

“அதே போல அவரும் ஆரம்பத்தில் சற்று நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் முதலில் செட்டிலாகி விட்டால் பின்னர் அவரால் தமது தேவைக்கேற்ப விளையாட முடியும். அவர் பொறுமையாக 8 – 10 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன்பின் மைதானத்தை நீங்கள் புரிந்து கொண்ட பின் உங்களது அதிரடி ஆட்டத்தை தொடங்குங்கள்” என்று ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவளித்து அவரது பேட்டிங்கில் முன்னேறுவதற்கான ஆலோசனையையும் கூறினார்.

- Advertisement -
Published by