பகவத் கீதை போல பேட்டிங் கலையை காமிச்சாரு – கிங் கோலியை வியந்து பாராட்டும் ஆஸி முன்னாள் வீரர்

Virat Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்றுள்ள 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்த தொடரில் அக்டோபர் 23ஆம் தேதியன்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பரமதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 160 ரன்களை துரத்திய போது ரோகித், ராகுல், சூரியகுமார் என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது.

- Advertisement -

அதனால் கதை முடிந்ததாக ரசிகர்கள் கவலையடைந்த போது களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவுடன் கைகோர்த்த விராட் கோலி நங்கூரமாக நின்று 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தி 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 82* (53) ரன்கள் குவித்து அபார வெற்றி பெற வைத்தார். அதுவும் ஷாஹீன் அப்ரிடி, ஹாரீஸ் ரவூப் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை டெத் ஓவர்களில் அபாரமாக எதிர்கொண்ட அவர் தன்னுடைய கேரியரிலும் வரலாற்றிலும் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை காப்பாற்றினார். அன்றைய நாளில் காலத்துக்கு மறக்க முடியாத அளவுக்கு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடிய அவரது பேட்டிங்கை பார்த்து எதிரணியான பாகிஸ்தானியர்கள் உட்பட உலகில் பாராட்டாதவர்களே இல்லை.

பகவத் கீதை:
அந்த வரிசையில் இணைந்துள்ள ஆஸ்திரேலியாவில் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் இந்து மதத்தை போற்றும் புனித நூலான பகவத் கீதை எனும் பாடலை கடவுள் எழுதியதை போல அன்றைய நாளில் பேட்டிங் என்னும் கலையை விராட் கோலி எழுதி காண்பித்ததாக புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் தம்மைப் பொறுத்தவரை வரலாற்றில் விராட் கோலி தான் முழுமையான இந்திய பேட்ஸ்மேன் என்று பாராட்டும் அவர் இது பற்றி பிரபல சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் பேசியது பின்வருமாறு. “பகவத் கீதை இந்து மதத்தின் தொகுப்பான புனித நூல். அதை மொழிபெயர்த்தால் “கடவுளின் பாடல்” என்று பொருள் வரும். டி20 கிரிக்கெட்டில் இதுவரை விளையாடியதிலேயே “கடவுளின் பாடலுக்கு” நெருக்கமான ஒரு இன்னிசை விராட் கோலி விளையாடியுள்ளார்”

VIrat Kohli IND vs PAK

“என்னுடைய வாழ்நாளில் கிரிக்கெட்டை நான் பார்த்ததில் அன்றைய நாளில் அவர் காண்பித்த பேட்டிங் கலையை வேறு யாரும் காட்டியதில்லை. கடந்த 15 வருடங்களில் நான் பார்த்ததை விட அந்த இன்னிங்ஸ் டி20 கிரிக்கெட்டை சட்ட பூர்வமாக்கியது. அதனால் இனிமேல் டி 20 கிரிக்கெட்டை யாரும் வெறும் பொழுதுபோக்காக ஒதுக்கி விட முடியாது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விராட் கோலி செய்ததை விட கடந்த காலங்களில் வேறு எந்த பெரிய வீரர்களும் இவ்வளவு கொடூரமாக பேட்டிங் கலையை காண்பித்து எதிரணியை சமரசமின்றி சிதைத்திருக்க முடியாது. அந்த வகையில் வரலாற்றில் விராட் கோலி முழுமையான இந்திய பேட்ஸ்மேன் ஆவார்”

- Advertisement -

“சாம்பியன்களில் மிகப்பெரியவர்களுக்கு மட்டுமே அவர்களின் கற்பனையையை மரணத்தையும் தாண்டி கொண்டு செல்லும் தைரியமும் புத்திசாலித்தனமும் உள்ளது. அது கோலியிடம் உள்ளது. ஒருவேளை டைகர் பட்டோடி மட்டுமே அந்த இலக்கை தாண்டியிருக்கலாம். இந்த நவீன கிரிக்கெட்டில் சிறந்த ஹிட்டர்கள் கூட அப்படி ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால் விராட் கோலியால் மட்டுமே முழுக்க முழுக்க பேட்டிங் நுணுக்கங்கள் மற்றும் கலையை வெளிப்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக அந்த வெற்றி பெற்றுக் கொடுக்க முடிந்தது”

Greg-Chappell

இதையும் படிங்க: ஐசிசி டி20 உ.கோ வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்துள்ள டாப் 5 அணிகளின் பட்டியல்

“வரலாற்றில் ஆடம் கில்கிறிஸ்ட் மட்டுமே இது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக அவர் அந்த இன்னிங்ஸ் விளையாடியது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த நாள் தான் டி20 கிரிக்கெட் முதிர்ச்சியடைந்த நாள். மேலும் இரு நாடுகளைச் சேர்ந்த தீவிரமான 90,000 ரசிகர்களுக்கு முன்பு அது நிகழ்ந்தது” என்று புகழ்ந்த தள்ளினார்.

Advertisement