தோனியின் மாஸ்டர் ப்ளானால் மொத்தமாக மாறிய இந்திய பேட்டிங், இதை கவனிசிங்களா – வெளியான தகவல் இதோ

Dhoni
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து 2வது போட்டியில் நெதர்லாந்தை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி நடை போட்டு வருகிறது. இதையடுத்து அக்டோபர் 30ஆம் தேதியன்று வலுவான தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து நாக் அவுட் சுற்றுக்கு செல்ல தயாராகி வருகிறது. முன்னதாக கடந்த டி20 உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடியாக ரன்களை வேண்டுமென்ற புதிய அணுகு முறையை இந்தியா பின்பற்றி வருகிறது.

அதன் பயனாக பெரும்பாலான போட்டிகளில் 180 – 200 ரன்களை குவித்து வரும் இந்தியா கடந்து ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியுள்ளது. இந்த அதிரடியான அணுகு முறைக்கு ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் ஒரு காரணமாக பார்க்கப்படும் நிலையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி மறைமுகமாக முக்கிய காரணமாக அமைந்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

ரவுண்ட் பேட்:
அதாவது பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட்டின் அடிப்பகுதியின் விளிம்பு பகுதியில் 2 மூலைகளும் டிசைன் காட்டுவதற்காக தவிர்த்து 99% மட்டமாக இருக்கும். அந்த வகையான பேட்டுகள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு உகந்ததாகவும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக செயல்படுவதற்கு லேசான பின்னடவை ஏற்படுத்துவதாக உணர்ந்த முன்னாள் கேப்டன் தோனி அடிப்பகுதியில் 2 விளிம்புகளையும் பகுதி வட்ட வடிவில் இருக்கும் வகையில் ஸ்பெஷல் பேட்டை உருவாக்கி கடந்த 2019 முதல் பயன்படுத்தி வருகிறார். அந்த நிலையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்ட அவர் இதை சில வீரர்களிடம் பயன்படுத்துமாறு பரிந்துரை செய்ததாக தெரிகிறது.

அவர் சொல்லி இந்திய வீரர்கள் கேட்காமல் இருப்பார்களா என்பது போல் ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், ரிசப் பண்ட் ஆகியோர் தற்போது அடிப்பகுதியில் வட்ட வடிவமாக கொண்ட பேட்டை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதை இந்த உலகக்கோப்பில் தெளிவாக பார்க்க முடிகின்ற நிலையில் இதனுடைய பின்னணியில் தோனி இருப்பதாக பிரபல எஸ்ஜி கிரிக்கெட் உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாராஸ் ஆனந்த் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“2019 உலக கோப்பைக்கு முன்பிலிருந்து தோனி தான் முதல் முறையாக அந்த வகையான பேட்டை பயன்படுத்த துவங்கினார். அதைப் பார்த்து தற்போதுள்ள இந்திய வீரர்கள் அதே மாதிரியான பேட்டை தயாரித்து கொடுக்குமாறு கேட்கிறார்கள். இந்த வகையான பேட் டி20 கிரிக்கெட்டுக்காகவே ஸ்பெஷலாக உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த வகையான பேட் மைதானத்தின் அனைத்து புறங்களிலும் எளிதாக அடிக்க உதவுவதாக பயன்படுத்திய பின் வீரர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தட்டையான அடிப்பகுதியுடன் கூடிய பேட் ஒப்பிட்ட அளவில் மூடிய நிலைப்பாட்டை தூண்டுகிறது”

“ஆனால் வட்ட வடிவமுடைய அடிமட்ட பேட் மிகவும் திறந்த நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. எளிதாக சொல்ல வேண்டுமெனில் இந்த வகையான பேட் கையாள எளிதில் உதவுகிறது. ஒருவர் பேட்டில் கீழே சற்று குறைத்து வட்டமாக மாற்றினால் அது தடிமனான அடித்தளத்தை பெறுகிறது. மேலும் ரிஷப் பண்ட்டை இந்த வகையான பேட்டை பயன்படுத்துமாறு தோனி அறிவுறுத்தினார். அவரும் தற்போது மெதுவாக அதை பயன்படுத்த தொடங்கியுள்ளார். இந்த வகையான பேட் இதுவரை யாராலும் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் அதை பயன்படுத்துபவர்கள் நல்ல வித்தியாசத்தை உணர்வதாக தெரிவிக்கிறார்கள்” என்று கூறினார்.

Advertisement