- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மா விராட் கோலி போனா என்ன? எல்லாத்தையும் அவங்க பாத்துப்பாங்க – கபில் தேவ் நம்பிக்கை

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் சமீபத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இப்படி இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றதால் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்திக்கும் என பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் அடுத்ததாக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது.

ரோஹித் சர்மா விராட் கோலி போனதால் பிரச்சனை இல்ல : கபில் தேவ்

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட அணி எப்படி தாக்குப் பிடிக்கும்? என்கிற விவாதங்களையும் பலரும் எழுப்பி வருகின்றனர். ஆனால் அதே வேளையில் இந்த இளம் அணிக்கு சில முன்னாள் வீரர்கள் தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய வீரர்கள் கொண்ட அணியை ஆதரித்து பேசியுள்ள முன்னாள் கேப்டனான கபில் தேவ் கூறுகையில் : தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்லவுள்ள அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பான திறமை உடையவர்கள். இங்கிலாந்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஒரு வெற்றிடம்தான் அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் ஏற்கனவே இது போன்று பெரிய பெரிய வீரர்களான கவாஸ்கர், சச்சின், டிராவிட் ஆகியோர் ஓய்வுபெற்ற போதுகூட வெற்றிடங்கள் ஏற்பட்டன. அதனை மீண்டும் இளம் வீரர்கள் அணிக்குள் வந்து நிரப்பினார்கள்.

- Advertisement -

அதேபோன்று தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் வெளியேறி இருந்தாலும் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் அந்த இடத்தை கண்டிப்பாக நிரப்புவார்கள் என்று நம்புகிறேன். சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணியில் பும்ரா போன்ற ஒரு வீரர் இருக்கும்போது நிச்சயமாக கேப்டனுக்கு மிகப்பெரிய ஒரு நம்பிக்கையை பும்ரா தனது பந்துவீச்சின் மூலம் கொடுப்பார்.

இதையும் படிங்க : கடைசி லீக் ஆட்டத்தில் ஜோஷ் ஹேசல்வுட் விளையாடாதது ஏன்? வெளியான தகவல் – விவரம் இதோ

சுப்மன் கில்லும் தனது சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன் என கபில் தேவ் கூறினார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -