இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 70-வது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஹேசல்வுட் விளையாடாதது ஏன்? :
அதனை தொடர்ந்து தற்போது லக்னோ அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் பிளேயிங் லெவனுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்றைய போட்டியிலும் அவர் விளையாடவில்லை என கேப்டன் ஜிதேஷ் சர்மா அறிவித்தார்.
கடைசியாக ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது ஆர்.சி.பி அணிக்காக விளையாடிருந்தார். அதன் பின்னர் கடைசியாக நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியை தவறவிட்ட அவர் தோள்பட்டை காயம் காரணமாக எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது.
ஆனால் ஆர்.சி.பி அணி தற்போது பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை எட்டியுள்ளதால் மீண்டும் ஆர்.சி.பி அணிக்கு விளையாட இந்தியா வந்துள்ளார். இதன் காரணமாக இன்று நடைபெற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் லக்னோ அணியை தோற்கடித்தால் மே 29-ஆம் தேதி நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும்.
ஒருவேளை தோல்வியை சந்தித்தால் அதற்கு அடுத்த நாள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலுமினேட்டர் போட்டியில் விளையாடும். எனவே ஆர்சிபி அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியம் என்பதால் ஹேசல்வுட் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடாததற்கு முக்கிய காரணமே :
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறுங்கள்.. ரசிகரின் விமர்சனத்திற்கு – பதிலளித்த ரவிச்சந்திரன் அஷ்வின்
அவர் இன்னும் தோள்பட்டை காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை என்றும் அதுமட்டும் இன்றி அடுத்து ப்ளே ஆப் சுற்றிற்கான போட்டியில் அவர் விளையாட வேண்டியது முக்கியம் என்பதனால் அவரது பணிச்சுமையை கருத்தில் வைத்தே ஆர்.சி.பி நிர்வாகம் அவருக்கு இந்த ஓய்வை தந்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



