கோலியிடமிருந்து இப்படி ஒரு வாரத்தை வரும்னு நான் எதிர்பார்க்கல – கபில் தேவ் அதிருப்தி

Kapil-dev-2
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் தற்போது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 110 ரன்களை மட்டுமே அடித்ததால் இந்திய அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

Williamson

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து விராட் கோலி பேசியதற்கு தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது கண்டனத்தை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் : நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த போட்டியில் நாங்கள் தைரியமாக விளையாடவில்லை என்று வெளிப்படையாக உண்மையை ஒத்துக் கொண்டார்.

இந்நிலையில் விராத் கோலியின் இந்த கருத்தினை கேட்டு அதிர்ச்சி அடைந்த கபில்தேவ் கூறுகையில் : கோலி போன்ற மிகப்பெரிய வீரரிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை நான் எதிர்பார்க்கவில்லை. இது போன்ற கருத்துக்கள் மிக பலவீனமானவர்களிடம் இருந்து வெளியே வரும் ஆனால் அணியை திறம்பட வழிநடத்தும் இவரைப்போன்ற ஒரு மாபெரும் வீரரிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்தால் மற்ற வீரர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை பிறக்கும்.

sodhi

கோலியிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் அப்படி பேசுபவர் ஒன்றும் கிடையாது என்பதை நான் அறிவேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி செய்த இந்த ஒரு தப்பு தான். இந்திய அணி இப்படி மோசமாக தோற்க காரணம் – இர்பான் பதான் விளாசல்

கோலி ஒரு போராளி இந்த சமயத்தில் அவருக்கு ஏதோ அழுத்தம் இருக்கலாம். ஆனால் ஒரு கேப்டனாக அவர் இப்படிப் பேசியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அணியின் ஒட்டுமொத்த மனவலிமையையும் பாதிக்கும் விடயமாக நான் இதைப் பார்க்கிறேன் என கபில்தேவ் கடுமையான பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement