அவ்ளோ சூப்பராலாம் ஆடல. இன்னும் 2 குறைகள் இருக்கு. இந்திய அணியை எச்சரித்த – கபில் தேவ்

Kapil Dev Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தாங்கள் விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணியில் இரண்டு குறைகள் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய அணி தற்போது வரை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

IND vs NED Rohit Sharma Axar Patel KL Rahul

- Advertisement -

இனிவரும் மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்கிற வேளையில் நடைபெற்ற முடிந்த இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி சில தவறுகளை செய்துள்ளது என கபில் தேவ் சுட்டிக்காட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது.

ஆனாலும் நாம் பேட்டிங்கில் கூடுதலாக ரன்கள் அடிக்க வேண்டும். கடைசி பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்து சமாளித்து விடுகிறார்கள். அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய மைதானங்களை பயன்படுத்தி தற்போது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். ஆனாலும் இந்திய அணியின் பந்துவீச்சில் ஆங்காங்கே குறை இருக்கிறது.

Virat Kohli 1

நெதர்லாந்து போன்ற அணிகளுக்கு இடையே விளையாடும் போது அதை நாம் ஒரு பயிற்சி போட்டியை போன்று நினைக்க வேண்டும். அதற்காக வெற்றி முக்கியமல்ல என்று நான் கூறவில்லை. அந்த போட்டியில் நாம் எந்தெந்த இடத்தை சரி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளலாம். அதேபோன்று கேப்டன் ரோகித் சர்மாவும் தனது அதிரடியான துவக்கத்தை அளிக்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் அவர் அதிரடியான அடித்தளத்தை அமைக்கும்போது பின்னால் வரும் வீரர்கள் மிகச் சிறப்பாக ரன்களை குவிக்க முடியும். ராகுலும் மீண்டும் பார்ம்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். அதேபோன்று விராட் கோலி தற்போது இருக்கும் பார்மிற்கு 20 ஓவரும் நின்று விளையாட வேண்டும். ஏனெனில் அவரால் எப்போது வேண்டுமானாலும் வேகமாக ரன்களை அடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் மைதானத்திலேயே கதறி அழுத பாக் வீரர் – நெருடல் நிகழ்வு

மேலும் சூரியகுமார் யாதவ் குறித்து அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். அவர் துவக்கத்தில் இருந்தே ரன்களை வேகமாக அடிப்பதால் அவரை அதிகம் புகழ வேண்டும் என கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement