தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் மைதானத்திலேயே கதறி அழுத பாக் வீரர் – நெருடல் நிகழ்வு

Shadab-Khan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியானது தற்போது அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் தடுமாறி வருகிறது. டி20 கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து இருந்தாலும் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி கடுமையான போராட்டத்தினை அளித்திருந்தது. ஆனால் ஜிம்பாப்வே அணியிடம் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 131 ரன்களை துரத்திய பாகிஸ்தான அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் தோல்வியை சந்தித்து இருந்தது தற்போது அந்த அணியின் மீது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி ஓவரின் கடைசி பந்து வரை வெற்றிக்கான வாய்ப்பு இருந்தும் கூட அந்த 131 ரன்களை அடிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் பலரும் பாகிஸ்தானின் மீது விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் கேப்டன் பாபர் அசாமின் அணி தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார். மிடில் ஆர்டரில் அனுபவ வீரரான சோயிப் மாலிக்கை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அவரை இந்த அணியில் தேர்வு செய்யாமல் பாபர் அசாம் தவறு செய்துவிட்டார் என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

அதே போன்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் கூறுகையில் : இந்து தொடரில் பாபர் அசாமின் கேப்டன்சி மிக மிக மோசமாக இருந்ததாகவும், தங்களது அணியில் உள்ள வீரர்களின் முழு பலத்தையும் அவர் வெளிக்கொணர தவறவிட்டார் என்றும் கடுமையாக பேசியுள்ளார். அதேபோன்று மற்றொரு முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீரும் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழுவின் மீது தனது கண்டனங்களை முன்வைத்தார்.

இப்படி பல்வேறு விமர்சனங்கள் பாகிஸ்தான அணியை சுற்றி அவர்களை நோகடித்து வரும் வேளையில் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் அந்த அணியின் துணைக்கேப்டன் சதாப் கான் மைதானத்திலேயே தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் கதறி அழுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வீடியோவில் போட்டி முடிந்ததும் ஓய்வறைக்கு முன்னால் உள்ள தரையில் அமர்ந்து கொண்டிருந்த சதாப் கான் கதறி அழுது கொண்டிருக்கிறார். பின்னர் அவர் பின்புறத்தில் இருந்து ஒரு நிர்வாகி அவரை தேற்றி அறைக்குள் அழைத்துச் சென்று விடுகிறார். இப்படி அந்த வீடியோ அமைந்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா – பாக் மேட்ச்ச லைவா பார்ப்பதற்காகவே சீக்கிரம் அந்த முடிவை எடுக்கப்போறேன் – ஆஸி கேப்டன் பின்ச் ஓபன்டாக்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் இன்னும் மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் வெற்றி தோல்வியின் அடிப்படையில் தான் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை எதிர்பார்த்து வருகிறது. ஆனாலும் இது நடக்காத காரியம் என்பதனால் இந்த தொடரில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பாகிஸ்தான அணி இழந்து விட்டது என்றே கூறலாம்.

Advertisement