இந்தியா – பாக் மேட்ச்ச லைவா பார்ப்பதற்காகவே சீக்கிரம் அந்த முடிவை எடுக்கப்போறேன் – ஆஸி கேப்டன் பின்ச் ஓபன்டாக்

VIrat Kohli IND vs PAK.jpeg
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது, இங்கிலாந்தை அயர்லாந்து தோற்கடித்தது, பாகிஸ்தானை ஜிம்பாப்பேவை தோற்கடித்தது போன்ற நிறைய போட்டிகள் எதிர்பாராத திருப்பங்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தது. ஆனால் அவை அனைத்திற்கும் உச்சகட்ட திரில்லர் திருப்பங்கள் நிறைந்த போட்டியாக அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரிகள் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி அமைந்தது என்றே கூறலாம். அண்டை நாடுகள் இவ்விரு அணிணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்கு போராடுவார்கள் என்பதால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் எப்போதுமே அனல் பறக்கும்.

VIrat Kohli IND vs PAK

- Advertisement -

அத்துடன் எல்லை பிரச்சனை காரணமாக இருதரப்பு தொடர்களை தவிர்த்து இதுபோன்ற உலகக் கோப்பைகளில் மட்டும் மோதுவதால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. அதை விட கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் சரித்திரத்தை மாற்றி எழுதியது. மேலும் சமீபத்திய ஆசிய கோப்பையிலும் பைனலுக்கு செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்த பாகிஸ்தானை இம்முறை மெல்போரன் நகரில் எதிர்கொண்ட இந்தியா விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து பழிக்கு பழி தீர்த்தது.

ரிட்டையர் ஆகப்போறேன்:
குறிப்பாக பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்தும் போது கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. அதனால் கதை முடிந்ததாக ரசிகர்கள் கவலையடைந்த போது நங்கூரத்தை போட்ட விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஆகியோர் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். அதில் பாண்டியா கடைசி ஓவரில் அவுட்டான நிலையில் பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் பொறுப்பின்றி ஸ்டம்பிங் ஆனார்.

Ashwin-and-Kohli

இருப்பினும் அப்போது களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் அதே ஒயிட் வலையில் சிக்காமல் கடைசி பந்தை கூலாக தூக்கி அடித்து வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்தார். அப்படி தங்களது நாட்டில் அனல் தெறித்த இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வீட்டிலிருந்து பார்த்ததே புல்லரிப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தம்முடைய ஓய்வுக்கு பின் அவ்விரு அணிகள் மோதும் போட்டி எங்கு நடந்தாலும் நேராக சென்று பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டி அவர் பேசியது பின்வருமாறு. “முடிவு எதுவாக இருந்தாலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போதுமே அபாரமாக இருக்கிறது. வீட்டில் அமர்ந்து கொண்டு அப்போட்டியை பார்த்த எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. ஏனெனில் அது பெரிய போட்டி என்பதை நான் அறிவேன். மேலும் நான் ஓய்வு பெற்றதும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி எங்கு நடந்தாலும் அதை நேராக சென்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”

“அதே போல் விராட் கோலி என்ன ஒரு மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடினார். கடைசி 3 ஓவரில் அவர் இருக்கும் போது எதிரணி யாராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்வளவு அழுத்தத்தை கொடுப்பார் அப்போது நீங்கள் அறிந்தீர்கள்” என்று கூறினார். முன்னதாக சுமாரான பார்ம் காரணமாக ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஆரோன் பின்ச் டி20 கிரிக்கெட்டிலும் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : என்னதான் சொல்லுங்க, அங்க விராட் கோலியும் இந்தியாவும் நேர்மைக்கு புறம்பாக நடந்துக்கிட்டாங்க – புதிய புயலை கிளப்பும் ஆஸி வீரர்கள்

அந்த வகையில் எப்போது ஓய்வு பெற்றாலும் இனி நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக இப்போதே அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Advertisement