மனசுக்குள்ள ஆசை இருக்கு.. ஆனா அது இல்லாததால் இந்திய அணி 2023 உ.கோ ஜெயிக்கும்ன்னு சொல்ல முடியல – கபில் தேவ் வெளிப்படை

Kapil Dev
- Advertisement -

ஐசிசி நடத்தும் 2023 உலக கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் அஹமதாபாத் நகரில் துவங்கி நவம்பர் 19 வரை இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் 2011 போல இந்தியா கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 தொடரை இந்தியா வென்றுள்ளது ரசிகர்களிடம் பெரிய தன்னம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஷாஹீன் அப்ரிடி போன்ற இடது கை பவுலர்களுக்கு எதிராக தடுமாறிக் கொண்டிருந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக விளையாடி பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற உதவினார்கள். அதற்கு முன்பாக 66/4 என பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா சரிந்தும் இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடி 226 ரன்கள் குவித்து மிடில் ஆர்டர் வலுவாக இருக்கிறது என்பதை காட்டினர்.

- Advertisement -

கபில் தேவின் ஆசை:
மேலும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற காயத்தை சந்தித்த வீரர்கள் முழுமையாக குணமடைந்து சிறப்பாக செயல்பட்டதும் இந்திய அணியை வலுப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதயத்திற்குள் இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் கோப்பையை தொடுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்று மனம் சொல்ல விரும்புவதாக கபில் தேவை கூறியுள்ளார்.

மேலும் நாக் அவுட் போன்ற முக்கிய போட்டிகளில் அதிர்ஷ்டம் கை கொடுக்க தவறுவதால் இந்தியா உலகக்கோப்பையை உறுதியாக வெல்லும் என்று சொல்ல முடியாது என அவர் கூறியுள்ளார். அதே சமயம் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியினர் தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாம் அரை இறுதிக்குள் செல்லும் டாப் 4 அணிகளில் ஒன்றாக இருப்பது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“அதன் பின் சற்று அதிர்ஷ்டம் கை கொடுத்தால் தான் அனைத்தையும் நம்மால் சாதிக்க முடியும். எனவே இப்போது நாம் கோப்பையை வெல்ல முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இருப்பினும் நமது அணி நன்றாக இருக்கிறது. மேலும் என்னுடைய இதயம் வேறு ஒன்று சொல்கிறது. ஆனால் கோப்பையை வெல்ல நாம் கடினமாக உழைக்க வேண்டுமென மனம் சொல்கிறது. எனவே உலகின் மற்ற அணிகளைப் பற்றி எனக்கு தெரியாது”

இதையும் படிங்க: ஃபிட்னெஸ் இல்லாத அவர வெச்சுகிட்டு 2023 உ.கோ ஜெயிக்க முடியாது.. தேர்வுக்குழுவே ட்ராப் பண்ண போறாங்க பாருங்க.. கம்பீர் அதிரடி பேச்சு

“ஆனால் இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்த வரை சாம்பியன் வெல்வதற்கு தயாராக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். அதற்கு அவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் விளையாட வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து உலக கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement