ஃபிட்னெஸ் இல்லாத அவர வெச்சுகிட்டு 2023 உ.கோ ஜெயிக்க முடியாது.. தேர்வுக்குழுவே ட்ராப் பண்ண போறாங்க பாருங்க.. கம்பீர் அதிரடி பேச்சு

Gautam Gambhir 5
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல் ஆகியோர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியது இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்தது.

ஆனால் நம்பர் 4வது இடத்தில் விளையாடக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து ஆசிய கோப்பையில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய பின் மீண்டும் காயத்தை சந்தித்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரிலும் உலக கோப்பையிலும் அவர் விளையாடுவாரா என்பதற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
இந்நிலையில் பல மாதங்களாக காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் மீண்டும் காயமடைந்து வெளியேறும் அளவுக்கு என்சிஏ அவசரப்பட்டு முழுமையாக குணமடைந்து விட்டார் என்று அனுமதி கொடுத்ததா? என கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முழுமையாக ஃபிட்டாக இல்லாத வீரர்களுடன் சாதிக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் 2023 உலகக் கோப்பையில் இந்திய அணியிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வுக்குழுவே நீக்குவதை பாரக்க முடியும் என்று அதிரடியாக பேசியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது கவலைக்குரிய அம்சமாகும். ஏனெனில் குணமடைவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்ட நீங்கள் ஆசிய கோப்பைக்கு திரும்பி வெறும் ஒரு போட்டியில் விளையாடி பின் மீண்டும் ஃபிட்டாக இல்லை. எனவே அவரை உலகக்கோப்பை போன்ற பெரிய தொடருக்கு இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யும் என்று எனக்கு தோன்றவில்லை. அதனால் அடுத்து வரும் நாட்களில் உலகக் கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக வேறு யாராவது இடம் பிடிப்பதை நீங்கள் பார்க்க முடியும்”

- Advertisement -

“ஏனெனில் நீங்கள் எப்போதும் உலகக் கோப்பைக்கு ஃபிட்டான வீரர்களுடன் செல்ல வேண்டும். குறிப்பாக முக்கிய நேரத்தில் ஒரு முக்கிய வீரர் காயத்தை சந்தித்தால் திடீரென்று மாற்ற முடியாது. எனவே அவர் ஃபிட்டாக இல்லாமல் போகும் பட்சத்தில் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினமாகி விடும். ஏனெனில் தற்போது அவருடைய ஃபார்ம் மற்றும் காயத்தின் நிலைமை நமக்கு தெரியாது”

இதையும் படிங்க: விக்கெட் கீப்பர்னா இப்படி தான் ஆடனும்னு எல்லாருக்கும் ரிஷப் பண்ட் காமிச்சிட்டாரு – ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு

“குறிப்பாக 7 – 8 மாதங்களுக்கு முன் விளையாடிய அவரின் ஃபார்ம் காயத்தால் இப்போதும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. அத்துடன் இது பற்றிய கேள்விகள் எழுந்தால் நீங்கள் அதை என்சிஏவிடம் கேட்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் குணமடைந்து விட்டார் என்று அனுமதி கொடுக்கிறார்கள். குறிப்பாக அவர் விரைவாக குணமடைந்து விட்டதாக அவர்கள் சொல்லியிருக்கலாம் என்பதை யார் அறிவார்” என்று கூறினார்.

Advertisement