ரன்களை விடுங்க, முதலில் உங்ககிட்ட ஃபிட்னெஸ் இருக்கா? இந்திய கேப்டன் ரோஹித்தை விளாசிய கபில் தேவ் – பேசியது என்ன

Kapil Dev Rohit Sharma
- Advertisement -

2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி உலகக் கோப்பை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக பதவி விலகிய பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் வாய்ந்த கேப்டன் ரோகித் சர்மா முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையிலும் வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்ற இந்தியா அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வழக்கமான தோல்வியையே சந்தித்தது. அதனால் ரோகித் சர்மாவின் வருகை எந்த மாற்றத்தை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நிரூபனமானது.

Rohit Injury

- Advertisement -

அதை விட கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலிருந்தே காயம் அல்லது பணிச்சுமை என்ற பெயரில் பெரும்பாலும் ஓய்வெடுத்த அவரால் வரலாற்றிலேயே முதல் முறையாக 2022இல் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலமும் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அப்படி கேப்டனே உடல் தகுதி இல்லாமல் இருந்ததைப் பார்த்து இதர வீரர்களும் சமீப காலங்களில் சுமாரான பிட்னஸ் கடைப்பிடித்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக பும்ரா, ஜடேஜா, தீபக் சஹர் போன்ற முக்கிய வீரர்கள் காயமடைந்து மீண்டும் குணமாகி மீண்டும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறினார்கள்.

விளாசும் கபில் தேவ்:
அதனால் கடுப்பான பிசிசிஐ அடுத்த வரும் தொடர்களில் யோ-யோ டெஸ்ட் எனப்படும் முழு உடல் தகுதியை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. அதாவது அடுத்து வரும் தொடர்களில் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறுவதும் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களின் தகுதி அளவுகோலில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதே யோ-யோ டெஸ்ட்டை கடந்த 2018 வாக்கிலேயே கண்டிப்புடன் கடைபிடித்த விராட் கோலி இந்திய அணியை ஃபிட்டான அணியாக வைத்திருந்தார்.

Rohit Sharma IND

மொத்தத்தில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் பெரிய அளவில் ரன்களைக் குவிப்பதை விட சுமாரான பிட்னெஸ் கொண்டிருக்கும் ரோகித் சர்மா இந்திய அணிக்கு பல வகைகளில் பின்னடைவை கொடுத்து வருகிறார். குறிப்பாக கேப்டனாக முன் நின்று அனைத்து போட்டிகளில் வழிநடத்த வேண்டிய அவர் சுமாரான பிட்னஸ் காரணமாக கேப்டனாக பொறுப்பேற்ற பின் இந்தியா விளையாடிய 68 போட்டிகளில் 39இல் மட்டுமே விளையாடியுள்ளார். இந்நிலையில் பேட்டிங்கில் ரன்கள் அடிப்பதை விடுங்கள் முதலில் கேப்டனாக இந்தியாவை வழிநடத்த ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் உள்ளாரா? என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் வெளிப்படையாக பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவிடம் எந்த குறையும் இல்லை. அவரிடம் எல்லாமே உள்ளது. ஆனால் என்னைப் பொறுத்த வரை அவருடைய உடல் தகுதியில் மிகப்பெரிய கேள்விக்குறி உள்ளது. அவர் போதுமான உடல் தகுதியுடன் உள்ளாரா? குறிப்பாக கேப்டனாக இருக்கும் அவர் மற்ற வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருப்பதை ஊக்குவிக்கும் அளவுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். சொல்ல வேண்டுமெனில் இதர அணி வீரர்கள் அவரைப் பார்த்து தங்கள் கேப்டனை நினைத்து பெருமைப்படும் அளவுக்கு இருக்க வேண்டும்”

Kapil-Dev

“எனவே ரோகித் சர்மாவின் உடல் தகுதியில் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது என்று நான் சொல்வேன். மேலும் அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்று விமர்சனங்கள் நிலவுகின்றன. ஆனால் என்னைப் பொறுத்த வரை அவரது கிரிக்கெட் நுணுக்கங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் வெற்றிகரமான கிரிக்கெட் வீரர். எனவே அவர் மட்டும் முழுமையாக ஃபிட்டாக மாறினால் மொத்த அணியும் அவரை பார்த்து பிட்டாக மாறிவிடும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: டி20 மேட்சுக்கு இவரு செட்டே ஆகமாட்டாரு. ப்ளீஸ் அவரோட கரியரே காலி ஆயிடும் – சுனில் கவாஸ்கர் கருத்து

இவர் மட்டுமல்லாமல் பாகிஸ்தானின் சல்மான் பட் போல சமீப காலங்களாகவே சில முன்னாள் வீரர்கள் ரோகித் சர்மாவிடம் நல்ல திறமை இருந்தும் ஃபிட்னஸ் இல்லாத காரணத்தாலேயே தடுமாறுவதாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் அவரோ உடல் தகுதியை விட திறமை தான் வெற்றிக்கு வித்திடும் என்று ஏற்கனவே பேட்டி கொடுத்திருந்தார். எனவே கபில் தேவ் போன்ற ஜாம்பவான்கள் சொல்வது ரோஹித் சர்மாவின் அதில் காதில் விழுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement