யாரா இருந்தா என்ன? இந்த நேரத்துல இப்படியா பேசுவீங்க? – கங்குலி மற்றும் கோலியை விளாசிய கபில் தேவ்

kapil dev
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோது ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி நீக்கப்பட்டார். இதனையடுத்து பல்வேறு விதமான சர்ச்சைகள் இந்திய அணியில் எழத் தொடங்கின. குறிப்பாக ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையே பகை என்றும் ரோஹித் தலைமையில் விராட் கோலி விரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. அதோடு ரோகித் அணியில் இருந்தால் தான் விளையாட மாட்டேன் என்று விராட் கோலி கூறியதாகவும் பல தகவல்கள் வெளியாகின. ஆனால் இவற்றிற்கெல்லாம் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

Kohli

- Advertisement -

தனக்கும் ரோஹித்திற்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் ரோஹித் கேப்டன் பதவிக்கு தகுதியான நபர் தான். அவரது தலைமையின் கீழ் விளையாட ஒரு வீரராக தயாராக இருக்கிறேன் என்றும் விராட்கோலி கூறியிருந்தார். ஆனால் இந்த பேட்டியில் விராட் கோலியின் ஒரு சில கருத்துக்கள் கங்குலி கருத்தை பொய் என்று கூறுவது போல அமைந்தது. அதன்படி தன்னை டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என யாரும் வலியுறுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு முன்பு விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு பதில் அளித்த கங்குலி கூறுகையில் : டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என இரண்டு வடிவத்திற்கும் ஒருவர் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்றும் அதன் காரணமாகவே கேப்டன் மாற்றம் நடைபெற்றது என்றும் கூறியிருந்தார். மேலும் விராட் கோலியை டி20 கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என வலியுறுத்தியதாகவும் கங்குலி குறிப்பிட்டார்.

Ganguly

இவர்கள் இருவரின் கருத்துக்களும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கங்குலி மற்றும் கோலி ஆகியோருக்கு இடையே சுமூக உறவு இல்லை என்றும் அவர்களிடையே விரிசல் உள்ளதாகவும், அவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் பல செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் விராட் கோலி கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கங்குலி தனது பதில் கருத்தினை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில் : தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு மிகப்பெரிய தொடரை அருகில் வைத்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசுவது சரியல்ல. இதையெல்லாம் யோசிக்க மாட்டீர்களா ? தற்போதுள்ள நிலைமையில் தென்னாப்பிரிக்க தொடர் குறித்த கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அதனை தவிர்த்து பொதுவெளியில் இவ்வாறு வார்த்தைப் போரில் ஈடுபடுவது சரியல்ல.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு எதிராக நடந்த இந்த விஷயத்துக்கு கங்குலி தான் பதில் சொல்லனும் – சல்மான் பட் பளீர்

தயவுசெய்து உங்கள் பிரச்சினைக்கு சீக்கிரம் முடிவு கட்டுங்கள். ஈகோவை விடுத்து அணியின் நலனை பாருங்கள் என கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 26ஆம் தேதி தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று புறப்பட்டு தென்ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement