விராட் கோலிக்கு எதிராக நடந்த இந்த விஷயத்துக்கு கங்குலி தான் பதில் சொல்லனும் – சல்மான் பட் பளீர்

Butt-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரானது வரும் டிசம்பர் 26-ம் தேதியும், ஒருநாள் தொடரானது ஜனவரி 19-ம் தேதியும் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான டெஸ்ட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் விராட் கோலி கேப்டனாகவும், ரோகித் சர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவியையும் பிசிசிஐ பறித்தது.

Rohith-1

- Advertisement -

மேலும் இனிவரும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக விராட் கோலி ஒருநாள் தொடரில் இருந்து விலக இருப்பதாகவும் வதந்தி பரவியது. ஆனால் தென்ஆப்பிரிக்க தொடருக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி நான் இந்த ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்றும் தனக்கும் ரோஹித்துக்கும் எந்தவித பிரச்சினையும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய போது தன்னை யாரும் விலக வேண்டாம் என வலியுறுத்தவில்லை என்று தெரிவித்திருந்தார். மற்றொருபுறம் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் : விராட் கோலியை நாங்கள் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும் அதனை கோலி மீறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Ganguly

இந்நிலையில் கோலி ரோகித் ஆகியோருக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று நிம்மதி அடைந்த வேளையில் தற்போது கங்குலி மற்றும் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் விரிசல் உள்ளதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இருவரின் கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறுகையில் : கங்குலி பிசிசிஐ தலைவர் ஆவார். இதுபோன்று விராட் கோலியுடன் முரண்படுவது சிறிய விஷயம் அல்ல.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு பதிலாக டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

t20 கேப்டன் பதவியில் இருந்து அவர் விலக வேண்டாம் என கங்குலி வலியுறுத்தியதாக கூறினார். அதேவேளையில் கோலி அப்படி என்னை யாரும் பதவி விலக வேண்டாம் என வலியுறுத்த வில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி இருவரும் மாறுபட்ட கருத்துக்களை அளித்துள்ளனர். இதுகுறித்து கங்குலி தான் முறைப்படி செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சல்மான் பட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement