ரோஹித் சர்மாவுக்கு பதிலாக டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Rohith-2
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டபோது துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். அதன்படி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு புறப்படுவதற்கு முன்னர் மும்பையில் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்ட ரோகித் சர்மா பயிற்சியின் போது காயமடைந்ததன் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக இந்திய ஏ அணியை வழிநடத்திய ப்ரியன்க் பன்சால் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

rohith 1

இருப்பினும் மாயங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக களம் இறங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது. அப்படி இந்த தென் ஆப்ரிக்க தொடரில் அகர்வாலுடன் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ள மூன்று வீரர்களை நாங்கள் இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம்.

- Advertisement -

rahul 1

1) கே.எல் ராகுல் : ஏற்கனவே ரோகித் சர்மா உடன் இணைந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அட்டகாசமான துவக்கத்தை அளித்த ராகுல் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை காயம் காரணமாக தவறிவிட்டார். ஆனால் தற்போது அவர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் அகர்வாலுடன் துவக்க வீரராக விளையாட ராகுல் தான் முதல் தேர்வாக இருப்பார். அந்த அளவிற்கு அவர் தற்போது டாப் பேட்டிங் ஃபார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Panchal

- Advertisement -

2) பிரியங்க் பன்சால் : அண்மையில் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர் முதல்தர கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடி 7000 ரன்களை குவித்துள்ளார். 31 வயதான இவர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் பிறகு தனது வாய்ப்பினை பெற்று உள்ளதால் அவருக்கும் இந்த தொடரில் துவக்க வீரராக விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

vihari

3) ஹனுமா விஹாரி : டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்காத போதே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணியில் பயணித்த அவர் தற்போது மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அதே வகையில் மிடில் ஆர்டரில் ரஹானே, புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பதனால் விஹாரி துவக்க வீரராக களமிறங்கும் ஒரு வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் எந்த வீரருக்கு வாய்ப்பை வழங்கலாம் ? இதுகுறித்த உங்களது பதில் என்ன?

Advertisement