கவலையே படாதீங்க.. கண்ணீர் விட்ட ரோஹித்திற்கு ஆறுதல் கூறி கபில் தேவ் – வெளியிட்ட பதிவு

Kapil-Dev-and-Rohit
Advertisement

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசியின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த மாபெரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அகமதாபாத் நகரில் நேற்று பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக ஐசிசி ஒருநாள் உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதே வேலையில் கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீண்டும் ஒருமுறை தோல்வியை சந்தித்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது.

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய அணியை நேற்று ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா உட்பட இந்திய அணியின் அனைத்து வீரர்களுமே கண்ணீர் மல்க சோகத்துடன் மைதானத்தில் காணப்பட்டனர். இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித்திற்க்கும் அணியின் வீரர்களுக்கும் ஆறுதல் கூறி பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் ரோகித் சர்மா குறித்து ஒரு உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : ரோகித் நீங்கள் மிகச் சிறப்பாக விளையாடினீர்கள். நீங்கள் விளையாடிய ஆட்டத்தில் நீங்களே மாஸ்டர். இன்னும் நிறைய வெற்றிகள் உங்களுக்காக காத்திருக்கிறது. இந்த நிலைமையில் நீங்கள் இருப்பது எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பது எனக்கு புரிகிறது.

இதையும் படிங்க : உலககோப்பையை ஆஸ்திரேலிய கேப்டனுக்கு வழங்கிய கையோடு இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்ற – பிரதமர் மோடி

இருந்தாலும் நம்பிக்கையுடன் இருங்கள். இந்தியாவே உங்களுடன் துணை நிற்கிறது என ரோஹித் சர்மாவிற்கு ஆறுதல் கூறும் விதமாக கபில் தேவ் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இந்த இறுதி போட்டியை காண வந்த பிரதமர் நரேந்திர மோடி தோல்விக்கு பின்னர் இந்திய அணியின் ஓய்வறைக்கே சென்று வீரர்களை கட்டி தழுவி ஆறுதல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement