உங்களுக்கு டென்னிஸ் லில்லி தெரியாதா, இல்ல பாண்டியா 142 கிலோவா? ரவி சாஸ்திரி கருத்துக்கு – கபில் தேவ் பதிலடி

kapil Dev ravi shastri
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்காக கடந்த 90 வருடங்களில் விளையாடிய மகத்தான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்று பார்த்தால் கபில் தேவ் மட்டுமே அனைவரது மனதில் நிற்கிறார் என்றே சொல்லலாம். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர் என்ற பட்டியலை புரட்டிப் பார்த்தாலும் அவருடைய பெயரே முதலிடம் வரும் அளவுக்கு கபில் தேவ் என்பவர் ஒரு சகாப்தமாக இன்றும் ஜொலிக்கிறார். ஏனெனில் அவரைப் போன்ற வீரரை தேடி அலையும் இந்தியா கடந்த காலங்களில் இர்பான் பதான் முதல் ஸ்டுவர்ட் பின்னி வரை பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்க்க நினைத்தது.

- Advertisement -

ஆனால் அதில் அவர்கள் நல்ல தொடக்கத்தை பெற்று நம்பிக்கையை கொடுத்தாலும் சில வருடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்காமல் சுமாராக செயல்பட்டு வெளியேறினர். அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 2016இல் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அத்துடன் இவரால் டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க முடியாது என்று விமர்சித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் கருத்தை பொய்யாக்கும் வகையில் 2018 நாட்டிங்கம் டெஸ்டில் 5 விக்கெட்களை எடுத்து வெற்றியில் பங்காற்றிய பாண்டியா வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சதமும் அடித்து அசத்தினார்.

கபில் தேவ் அதிருப்தி:
அதனால் ஒரு வழியாக கபில் தேவ் போன்றவர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் 2018 ஆசிய கோப்பையில் காயத்தை சந்தித்த பாண்டியா 2019 உலகக்கோப்பைக்கு பின் மீண்டும் காயமடைந்து 2021 டி20 உலகக்கோப்பையில் சுமாராக செயல்பட்டார். அதனால் கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடாமலேயே குணமடைந்த பின் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக மிகச்சிறந்த ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்து கம்பேக் கொடுத்தார்.

Pandya

அதில் சிறப்பாக செயல்பட்டு இன்று ரோகித்துக்கு பின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் அடுத்த கேப்டனாகும் அளவிற்கு பாண்டியா முன்னேறியுள்ளார். ஆனால் அப்போதிலிருந்தே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் அவர் ஐபிஎல் தொடரில் பல கோடிகளை பார்த்து விட்டதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான எந்த பயிற்சியும் முயற்சியும் எடுக்காமல் ஆர்வத்தையும் காட்டவில்லை. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மட்டுமாவது நாட்டுக்காக விளையாடுங்கள் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கேட்டார்.

- Advertisement -

ஆனால் அதற்கு 100% எதிக்ஸ் கடைபிடிப்பதால் ஒரு வீரரின் வாய்ப்பை பறிக்க மாட்டேன் என்று பதிலளித்த பாண்டியா தற்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் எண்ணமும் இல்லை என்று வெளிப்படையாக கூறினார். அந்த நிலையில் ஒருநாள், டி20 போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோகித்துக்கு பதில் பாண்டியா கேப்டனாக செயல்பட தகுதியானவர் என்றாலும் அவருடைய உடல் ஒத்துழைக்காது என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Shastri

அதனால் அவரை தொந்தரவு செய்யாமல் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் கேப்டனாக இருக்க விடுங்கள் என்று ரவி சாஸ்திரி கூறியிருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டென்னிஸ் லில்லி ஏகப்பட்ட காயத்தை சந்தித்தும் அதிலிருந்து குணமடைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது உங்களுக்கு தெரியாதா அல்லது பாண்டியா 142 கிலோவை கொண்ட ரஹீம் கார்ன்வால் போன்றவாரா என ரவி சாஸ்திரிக்கு இந்த விவகாரத்தில் கபில் தேவ் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சாஸ்திரியின் கருத்துக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஏன் அவ்வாறு சொன்னீர்கள்? டென்னிஸ் லில்லி தவிர கிரிக்கெட்டில் யாரும் அதிகமான காயங்களை சந்தித்திருக்க மாட்டார்கள் என்பதால் அந்த கருத்தை நான் நம்பவில்லை. ஏனெனில் மனித உடல் எந்த சூழ்நிலையிளிருந்தும் குணமடைந்து டாப் கண்டிசனுக்கு வரும் தன்னை கொண்டது. எனவே ஹர்திக் பாண்டியா போன்ற நன்றாக காட்சியளிக்கும் சிறந்த விளையாட்டு வீரர் தன்னுடைய உடலளவில் கடினமாக உழைக்க வேண்டும்”

Kapil-Dev

இதையும் படிங்க:IND vs WI : ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடாதது ஏன்? டாசின் போதே காரணத்தை கூறிய – ஹார்டிக் பாண்டியா

“அவருடைய உடல் உழைப்பை ஏற்காதா? ஒருவேளை வெஸ்ட் இண்டீஸின் ரஹீம் கார்ன்வால் போல பெரிய மனிதராக இருப்பவரால் அதைச் செய்ய முடியாது என்று சொன்னால் அதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் நீண்ட காலமாக கடினமாக உழைத்தால் அவராலும் தம்முடைய உடலை குறைக்க முடியும்” என்று கூறினார்

Advertisement