IND vs WI : ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடாதது ஏன்? டாசின் போதே காரணத்தை கூறிய – ஹார்டிக் பாண்டியா

Pandya-and-Kohli-Rohit
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Pandya-Toss

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று பாரபடாஸ் மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து இந்திய அணியானது தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறாததால் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் ரோகித்துடன் சேர்த்து விராட் கோலியும் இந்த போட்டியில் விளையாடவில்லை.

Rohit-and-Kohli

இதன் காரணமாக சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடதற்கு என்ன காரணம்? என்று குறித்து பிறகு பேசிய ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :

- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வை வழங்கும் விதமாகவே இந்த போட்டியில் அவர்கள் இருவரும் விளையாட வில்லை.

இதையும் படிங்க : IND vs WI : 2 ஆவது ஒருநாள் போட்டிக்கான அணியில் 2 மாற்றங்கள். கேப்டன் பாண்டியா அறிவிப்பு – பிளேயிங் லெவன் இதோ

மேலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர்கள் இருவரும் புத்துணர்ச்சியோடு அணிக்கு திரும்புவதற்காகவே இந்த ஓய்வினை அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் கேப்டன் ஹார்டிக் பாண்டியா தெளிவாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement