IND vs WI : 2 ஆவது ஒருநாள் போட்டிக்கான அணியில் 2 மாற்றங்கள். கேப்டன் பாண்டியா அறிவிப்பு – பிளேயிங் லெவன் இதோ

Pandya-Toss
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது ஜூலை 29-ஆம் தேதி பார்படாஸ் நகரில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

IND-vs-WI

- Advertisement -

இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இன்றைய இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இன்றைய இரண்டாவது போட்டியில் இடம் பெறவில்லை என கேப்டன் ஹார்டிக் பாண்டியா அறிவித்தார்.

Rohit-1

மேலும் விராட் கோலியின் இடத்தில் சஞ்சு சாம்சனும், ரோகித் சர்மாவிற்கு பதிலாக இஷான் கிஷனும் துவக்க வீரராக களமிறங்குவதால் மிடில் ஆர்டரில் அக்சர் பட்டேல் ஆல் ரவுண்டராக சேர்க்கப்பட்டுள்ளார். அது தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்ட வேளையில் தற்போது ரோஹித் சர்மா இந்த இரண்டாவது போட்டியில் விளையாடாததால் இன்றைய ஒருநாள் போட்டியிலும் அவர் இன்று கேப்டன்சி செய்கிறார். அதன்படி இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : வெ.இ தொடர் மட்டுமல்ல 2023 உலக கோப்பையிலும் அவர் விளையாடனும் – சொதப்பல் வீரருக்கு ஆர்பி சிங் ஆதரவு, காரணம் இதோ

1) சுப்மன் கில், 2) இஷான் கிஷன், 3) சஞ்சு சாம்சன், 4) ஹார்டிக் பாண்டியா, 5) சூரியகுமார் யாதவ், 6) ரவீந்திர ஜடேஜா, 7) அக்சர் பட்டேல், 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) உம்ரான் மாலிக், 11) முகேஷ் குமார்.

Advertisement