வெ.இ தொடர் மட்டுமல்ல 2023 உலக கோப்பையிலும் அவர் விளையாடனும் – சொதப்பல் வீரருக்கு ஆர்பி சிங் ஆதரவு, காரணம் இதோ

RP Singh
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப்போகும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையுடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோல்வியை சந்தித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சொந்த மண்ணில் 2011 போல சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. அதற்கு முன்பாக அத்தொடரில் விளையாடும் தரமான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் பயணமாக தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இஷான் கிசான், முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

SUryakumar Yadav 112

- Advertisement -

இருப்பினும் அந்த ஒருநாள் தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் வாய்ப்பு பெற்றுள்ளது நிறைய ரசிகர்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் அதிரடி சரவெடியாக விளையாடி சூழ்நிலை எதுவாக இருந்தாலும் மைதானத்தின் நாலாபுறங்களிலும் எதிரணியை அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவித்து 3 சதங்கள் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனனுக்கு முன்னேறி மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றழைக்கப்படுகிறார்.

ஆர்பி சிங் ஆதரவு:
ஆனால் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் அவர் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹாட்ரிக் கோல்டன் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் மீண்டும் அசத்திய அவர் இத்தொடரின் முதல் போட்டியில் 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் வழக்கம் போல 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

Suryakumar Yadav

மொத்தத்தில் டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை அடித்து அட்டகாசமாக செயல்படும் அவர் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் அப்படியே நேர்மாறாக ஒரு சதம் கூட அடிக்காமல் 24 போட்டிகளில் 452 ரன்களை 23.8 என்ற மோசமான சராசரியில் எடுத்து சுமாராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற விமர்சனங்களை சந்தித்துள்ள சூரியகுமார் யாதவ் 2023 உலகக் கோப்பையில் 4, 5 போன்ற இடங்களில் விளையாட தகுதியானவர் என முன்னாள் வீரர் ஆர்பி சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக டி20 போல ஒரே ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் அந்த தன்னம்பிக்கையுடன் சூரியகுமார் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் தனக்கென்று தனி முத்திரையை ஏற்படுத்துவார் என்று கூறும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

Suryakumar-Yadav

“ஸ்ரேயாஸ் ஐயர் ஃபிட்டாகும் பட்சத்தில் அவரைப் போலவே சூரியகுமார் யாதவும் 4வது இடத்தில் விளையாடுவதற்கு நல்ல வீரர் ஆவார். ஒருவேளை நீங்கள் பேக் அப் வீரராக வைத்திருக்க நினைத்தாலும் அவருக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்களில் வாய்ப்பு கொடுத்து வளர்க்க வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயமாக தரமான வீரர். ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் இன்னும் தன்னுடைய முத்திரையை ஏற்படுத்தவில்லை”

- Advertisement -

“ஆனால் அவர் பேட்டிங் செய்யும் விதத்திற்கு நிச்சயமாக 4 அல்லது 5 போன்ற இடங்களில் பொருந்தக்கூடியவராக இருப்பார். மேலும் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடருக்கு நீங்கள் தரமான பேக் அப் வீரர்களுடன் செல்ல வேண்டும். அந்த நிலையில் தற்போது அவர் டி20 கிரிக்கெட்டில் நல்ல பார்மில் இருக்கிறார். ஆனால் ஒருநாள் போட்டிகள் வித்தியாசமானது. அதில் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அவர் தன்னுடைய திட்டத்தில் சற்று மாற்றம் செய்து விளையாட வேண்டும்”

RP-Singh

இதையும் படிங்க:இந்த அடி போதுமா? சிக்ஸர் மழை பொழிந்த ரியன் பராக் – யூசுப் பதானின் 13 வருட சாதனையை தூளாக்கி ஆல் ரவுண்டராக மிரட்டல்

“மிகவும் அனுபவமிக்க வீரரான அவருக்கு ஒரு போட்டி மட்டும் கிளிக்கானால் போதும். குறிப்பாக ஒரு இன்னிங்ஸ் சிறப்பாக விளையாடி பெரிய ஸ்கோர் குவித்தால் இது போன்ற பிரச்சனைகளை அவர் சந்திக்க மாட்டார். இவை அனைத்தையும் தாண்டி எத்தனை பேர் தற்போது இந்திய அணிக்கு 4வது இடத்தில் விளையாட தகுதியானவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும்” என கூறினார்.

Advertisement