இந்த அடி போதுமா? சிக்ஸர் மழை பொழிந்த ரியன் பராக் – யூசுப் பதானின் 13 வருட சாதனையை தூளாக்கி ஆல் ரவுண்டராக மிரட்டல்

Riyan Parag
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பை 2023 ஒருநாள் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற 7வது லீக் போட்டியில் கிழக்கு மண்டலம் மற்றும் வடக்கு மண்டலம் ஆகிய அணிகள் மோதின. புதுச்சேரியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் 10, உட்கர்ஸ் சிங் 11, விராட் சிங் 2, சேனாதிபதி 13, கேப்டன் சௌரப் திவாரி 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 57/5 என ஆரம்பத்திலேயே கிழக்கு மண்டலம் சரிந்து போது இளம் வீரர்கள் ரியான் பராக் மற்றும் குமார் குஷக்ரா ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக நின்று சரிவை சரி செய்ய போராடினர். அதில் குமார் சற்று நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் ரியான் பராக் அதிரடியாக செயல்பட்டு ரன்களை குவித்தார். அந்த வகையில் 16வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் எளிதாக விக்கெட்டை விடாமல் நங்கூரமாக நின்று எதிரணி பவுலர்களுக்கு சவாலை கொடுத்து அரை சதமடித்தனர்.

- Advertisement -

அசத்தல் பராக்:
நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி விரைவாக ரன்களை குவிக்க துவங்கிய இந்த ஜோடியில் ரியான் பராக் பவுண்டரிகளை விட அதிகமாக சிக்சர்களை அடித்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அப்படி 47 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 6வது விக்கெட்டுக்கு 292 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து கிழக்கு மண்டல அணியை தூக்கி நிறுத்திய இந்த ஜோடியில் குசக்ரா சதத்தை தவற விட்டு 8 பவுண்டரி 4 சிக்சருடன் 98 (87) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரிலேயே மறுபுறம் 5 பவுண்டரியும் 11 சிக்ஸர்களையும் பறக்க விட்ட ரியன் பராக் சதமடித்து 131 (102) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இறுதியில் சபாஷ் அகமது 16* (7) ரன்களும் முராசிங் 25 (14) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் கிழக்கு மண்டலம் 337/8 ரன்கள் எடுக்க வடக்கு மண்டலம் சார்பில் அதிகபட்சமாக மயங் யாதவ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 338 என்ற கடினமான இலக்கை துரத்திய வடக்கு மண்டலம் ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 45.3 ஓவரிலேயே 229 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதிகபட்சமாக மந்தீப் சிங் 50, ஹிமான்சு ராணா 40, கேப்டன் நிதிஷ் ராணா 27, ரோகில்லா 41 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் அதை பெரிய ரன்களை எடுக்க தவறினர். மறுபுறம் பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய ரியன் பராக் 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 57 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அந்த வகையில் பேட்டிங் மற்றும் பவுலிங் துறைகளில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக அசத்திய அவர் கிழக்கு மண்டலம் 88 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெறுவதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் கடந்த 2019 முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 54 போட்டிகளில் விளையாடியும் வெறும் 600 ரன்களை 16.22 என்ற படுமோசமான சராசரியில் எடுத்து வருவதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளார். அதை விட விராட் கோலி மாதிரி பெரியவற்றை சாதித்தது போல டுவிட்டரில் அதிகமாக பேசுவதும் ரிங்கு சிங் போல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிப்பேன் என்று வாயில் சொல்வதையும் வழக்கமாக வைத்திருந்த அவர் அதை செயலில் காட்ட தவறியதால் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க:வீடியோ : உங்களுக்கு வந்தா மட்டும் தக்காளி சட்னியா? இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் ப்ராடை விளாசும் ரசிகர்கள் – காரணம் இதோ

அந்த நிலையில் இந்த போட்டியில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்ட ரியன் பராக் தியோதார் கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற யூசுப் பதானின் 12 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரியன் பராக் : 11 சிக்ஸர்கள், வடக்கு மண்டலத்திற்கு எதிராக, 2023*
2. யூசுப் பதான் : 9 சிக்ஸர்கள், வடக்கு மண்டலத்திற்கு எதிராக, 2010
3. ஸ்ரேயாஸ் ஐயர் : 8 சிக்ஸர்கள், இந்தியா சி அணிக்கு எதிராக, 2018

Advertisement