- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த விஷயத்தில் தோனியை விட விராட் கோலி சிறந்தவர்.. இந்தியா கோப்பை ஜெய்க்க வாய்ப்பிருக்கு.. கபில் தேவ்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முதல் அணியாக தகுதிப் பெற்றுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடுகிறது. அங்கே குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளை தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலில் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது.

அதனால் 2023 உலகக்கோப்பை ஃபைனல் தோல்விக்காக ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதற்கு 265 ரன்களை துரத்திய இந்திய அணியின் வெற்றிக்கு நங்கூரமாக விளையாடி 84 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடருக்கு முன்பாக சுமாரான ஃபார்மில் இருந்த அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

- Advertisement -

கபில் தேவ் பாராட்டு:

இருப்பினும் இத்தொடரில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக 250 ரன்களை சேசிங் செய்யும் போது தனது அனுபவத்தை பயன்படுத்தி நங்கூரமாக விளையாடிய விராட் கோலி சதத்தை அடித்து இந்தியாவை வெற்றிபெற வைத்தார். அப்படியே வலுவான ஆஸ்திரேலியாவையும் தோற்கடிக்க உதவிய அவர் தன்னைச் சேஸ் மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் விராட் கோலியை முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக அழுத்தமான சேசிங் செய்யும் ஒருநாள் போட்டிகளில் தோனி உட்பட உலகின் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட விராட் கோலி சிறந்தவர் என்று அவர் பாராட்டியுள்ளார். மேலும் ஃபைனலில் விளையாடும் நியூசிலாந்தை குறைத்து மதிப்பிடாமல் கவனத்துடன் செயல்பட்டால் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கபில் தேவ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தோனியை விட பெஸ்ட்:

“பெரிய சவாலை சமாளிப்பதற்கான சுபாவம் அவரிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதிலிருந்து தான் அவர் தனக்கான எனர்ஜியைப் பெறுகிறார். அந்த அழுத்தத்தில் விளையாடுவதை அவர் விரும்புகிறார். அவரைப் போன்ற சுபாவம் சில வீரர்களுக்கு மட்டுமே இருக்கும். நாளின் இறுதியில் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமை மற்றும் கிளாஸ் அவரிடம் இருக்கிறது”

இதையும் படிங்க: நாங்க பண்ண இந்த தப்புதான் தோல்விக்கு காரணம்.. இனி அதை செய்யக்கூடாது – தெம்பா பவுமா வருத்தம்

“அதை தோனி எந்தளவுக்கு செய்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் விராட் கோலி அதைச் செய்வதில் மற்ற அனைவரையும் விட ஒரு படி மேலே இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் விளையாடும் மற்றொரு அணியையும் நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று தெரிவித்தார்.

- Advertisement -