நாங்க பண்ண இந்த தப்புதான் தோல்விக்கு காரணம்.. இனி அதை செய்யக்கூடாது – தெம்பா பவுமா வருத்தம்

Bavuma
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியானது நேற்று லாகூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நாங்க செய்ஞ்ச இந்த தவறு தன தோல்விக்கு காரணம் : தெம்பா பவுமா

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாயில் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 363 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை மட்டுமே குவித்ததால் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறுகையில் :

362 இந்த மைதானத்தில் அடிக்கக்கூடிய ஒரு ஸ்கோர் தான். ஒரு 350 ரன்கள் வரை இருந்திருந்தால் கூட எங்களால் ஸ்கோரை எட்ட முடியும் என்று நம்பி இருப்போம். இந்த போட்டியில் நானோ அல்லது வேண்டர்டுசைன் களத்தில் இறுதிவரை நின்று விளையாடி இருக்க வேண்டும். ஆனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்களை சுருட்டி விட்டனர்.

- Advertisement -

அதேபோன்று நியூசிலாந்து அணியின் வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த போட்டியில் நாங்கள் அடைந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக நாங்கள் வழங்கிய வாய்ப்புகள் தான் காரணம் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : முதல் நியூசிலாந்து வீரராக கேன் வில்லியம்சன் நிகழ்த்திய வரலாற்று சாதனை – விவரம் இதோ

ஏனெனில் எதிரணியின் வீரர்களுக்கு நாம் வாய்ப்புகளை வழங்கும்போது அவர்கள் ஆட்டத்திற்கு வந்து விடுகிறார்கள். அந்த தவறை மட்டும் இனி செய்யவே கூடாது என தெம்பா பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement