முதல் போட்டியிலேயே 50 ரன் அடிச்சா அப்றம் சதங்கள் ஈஸி, இல்லனா உங்க நிலைமை ரொம்ப கஷ்டம் – கபில் தேவ் அட்வைஸ்

Kapildev
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை கடந்த பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குறைந்தது 3 போட்டிகளை வென்று ஜூலையில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது. அதே சமயம் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் நம்பிக்கை நாயகன் விராட் கோலி எப்படியாவது சதமடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கியுள்ளார். ஏனெனில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய சாதனைகளை படைத்து வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு 2022 ஆசிய கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்து சமீபத்திய ஒருநாள் தொடர்களிலும் அடுத்தடுத்த சதங்களை அடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

Virat Kohli Ban

- Advertisement -

ஆனால் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் சதமடிக்காத அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மேலும் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணிலேயே சவாலான சூழ்நிலையில் சதங்களை அடித்து தனது தரத்தை நிரூபித்துள்ள அவர் மொத்தம் 20 போட்டிகளில் 7 சதங்கள் 5 அரை சதங்கள் உட்பட 1682 ரன்களை 48.05 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார்.

ஆரம்பம் முக்கியம்:
ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் 11 இன்னிங்ஸில் வெறும் 330 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள அவர் வெறும் 1 சதம் 1 அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். எனவே இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து இத்தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அவர் சதமடிப்பது அவசியமாகிறது. அந்த நிலையில் நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் 50 ரன்கள் அடித்தால் கூட அந்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்தி விராட் கோலியால் அடுத்து வரும் போட்டிகளில் 2 – 3 சதங்களை அடிக்க முடியும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

Kapil-Dev

ஆனால் முதல் போட்டியிலேயே சொதப்பும் பட்சத்தில் எஞ்சிய போட்டிகளில் தடுமாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அவர் இத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் இன்னும் அவரிடம் ரன்களுக்கான பசி உள்ளது. அந்த நிலையில் முதல் போட்டி மிகவும் முக்கியமாகும். அவரைப் போன்ற பெரிய வீரர்களுக்கு முதல் போட்டி மிகவும் முக்கியமாகும். ஒருவேளை அதில் அவரால் குறைந்தது 50 ரன்கள் எடுத்தால் கூட அடுத்து வரும் போட்டிகளில் 2 – 3 சதங்களை எளிதாக அடிக்க முடியும். ஏனெனில் 2 அணிகளுக்கும் இரு வாய்ப்புகள் கிடைக்கும்”

- Advertisement -

“மேலும் நாக்பூர் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருப்பதாகவும் அதில் 600 ரன்கள் அடிக்க முடியாது என்றும் கேள்விப்பட்டேன். இப்போதெல்லாம் பெரும்பாலான மைதானங்கள் 60% பவுலர்களுக்கும் 40% மட்டுமே பேட்ஸ்மேனுக்கு சாதகமாக உள்ளது. எனவே அங்கே 400 ரன்கள் அடிக்க முடியாது என்று சொல்ல முடியாது. இருப்பினும் 220 – 250 ரன்கள் நல்ல ரன்களாகும். 300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தால் வெற்றி நிச்சயம் என்ற உணர்வு ஏற்படும். எனவே பிட்ச் நல்லபடியாக இருந்தால் விராட் கோலி நிச்சயம் பெரிய ரன்களை அடிப்பார்” என்று கூறினார்.

Todd Murphy

இருப்பினும் நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்தியாவின் சுழலில் வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்தில் அதிரடியாகவும் நேரம் செல்ல செல்ல நிதானமாகவும் செயல்பட்டு 120 (212) ரன்கள் குவித்து மிகச் சிறந்த சதமடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs AUS : 3 ஆவது நாளே உறுதியான இந்திய அணியின் வெற்றி – இன்னிங்ஸ் வெற்றிக்கே வாய்ப்பிருக்கு

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி அறிமுக வீரர் டோட் முர்ஃபி வீசிய ஒயிட் போன்ற பந்தில் தேவையின்றி 12 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் இப்போட்டியில் இந்தியா 400 ரன்கள் அடித்து 224 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் 2வது இன்னிங்ஸ் விராட் கோலி சதமடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement