விராட் கோலி இல்ல. இவரு இல்லாம இந்திய அணியே கிடையாது. அவ்ளோ சூப்பர் பிளேயர் அவரு – கபில் தேவ் கருத்து

kapil dev
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உலகக் கோப்பை டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடைசியாக கடந்த ஓராண்டாகவே தாங்கள் பங்கேற்ற அனைத்து டி20 தொடர்களிலும் மிகச் சிறப்பான வெற்றியினை பெற்ற இந்திய அணியானது நிச்சயம் இந்த டி20 உலக கோப்பையையும் கைப்பற்றும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது. அந்த வகையில் இந்திய அணி கடந்த ஒரு ஆண்டாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

இப்படி இந்திய அணியின் மிகச் சிறப்பான ஆட்டத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர் நான்காவது இடத்தில் இறங்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ் தான். கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய சூரியகுமார் யாதவ் இதுவரை 30-க்கும் குறைவான போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 1000 ரன்களை நெருங்கி உள்ளார்.

அதுமட்டும் இன்றி ஆசிய கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டம், இங்கிலாந்து தொடரில் சதம் என தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவ் இந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Suryakumar YAdav

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் 15 ரன்கள் எடுத்து அவர் ஆட்டம் இழந்தாலும் நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக சூரியகுமார் யாதவ் தான் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருப்பார்.

- Advertisement -

கடந்த சில தொடர்களாகவே தனது பிரமாதமான பேட்டிங்கின் மூலம் உலகத்தை அவர் திரும்பி பார்க்க வைத்துள்ளார். மேலும் தற்போது உள்ள இந்திய அணியில் அவரை ஒதுக்கி வைத்து இந்திய அணி குறித்து பேச முடியாது என்கிற அளவிற்கு அவர் தனது சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்காக வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : நல்லவேளை என்னை காப்பாத்திட்ட அஷ்வினுக்கு நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக் – காரணம் என்ன?

விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் போன்ற வீரர்கள் அவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினால் இந்திய அணிக்கு மேலும் பலத்தை தரும். தற்போதைய அணியில் உள்ள அபாயகரமான வீரர் என்றால் நிச்சயம் நான் சூர்யகுமார் யாதவை தான் குறிப்பிடுவேன் அதில் எந்த சந்தேகமும் இல்லை என கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement