வீடியோ : நல்லவேளை என்னை காப்பாத்திட்ட அஷ்வினுக்கு நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக் – காரணம் என்ன?

Dinesh Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 159 ரன்கள் குவிந்ததால் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடி இந்திய அணியானது 31 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் இந்த போட்டியில் எவ்வாறு வெற்றி பெறப் போகிறது என்று அனைவரும் சற்று பதட்டம் அடைந்தனர்.

அவ்வேளையில் விராட் கோலி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலி 53 பந்துகளை சந்தித்து 82 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றிக்கு முக்கியமான கட்டத்தில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்றபோது முதல் பந்தில் ஹார்டிக் பாண்டியா ஆட்டம் இழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து இரண்டாவது பந்தில் தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுத்துக் கொடுக்க மூன்றாவது பந்தில் விராட் கோலி 2 ரன்களை அடித்தார். பின்னர் கடைசி 3 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

பின்னர் 4 ஆவது பந்தில் நோபாலுடன் சேர்ந்து ஒரு சிக்சரையும் கோலி அடித்தார். அதன் பிறகு மீண்டும் வீசப்பட்ட பந்தில் மூன்று ரன்கள் பரிசாக கிடைக்க 5ஆவது பந்தில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் ஆகியும் வெளியேறியிருந்தார். அதனை தொடர்ந்து கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் அஸ்வின் லாபகமாக ஒரு வைட் வாங்கினார்.

- Advertisement -

அதோடு ஆட்டம் சமநிலைக்கும் வந்தது. அதனை தொடர்ந்து இறுதி பந்தில் அஸ்வின் பவுண்டரி அடிக்கவே இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் முக்கியமான இடத்தில் விளையாடிய தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் ஆகி ஆட்டம் இழந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடைசி பந்தில் அஸ்வின் வெற்றிகரமாக பவுண்டரி அடித்து போட்டியை முடித்துக் கொடுத்தார்.

இதையும் படிங்க : மழையோடு சேர்ந்து விளையாடிய விதி, அரிதான பெனால்டியால் பறிபோன தெ.ஆ’வின் வெற்றி – ரூல்ஸ் கூறுவது என்ன?

இந்நிலையில் அந்த நிகழ்விற்கு நன்றி சொல்லும் விதமாக தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் தினேஷ் கார்த்திக் அஸ்வினிடம் நன்றி கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நேற்றைய போட்டியில் என்னை காப்பாற்றியதற்கு நன்றி என்று தினேஷ் கார்த்திக் கூறுகிறார். அதற்கு அஸ்வினும் சிரித்துக்கொண்டே பதில் அளித்து அங்கிருந்து நகர்கிறார்கள். இப்படி அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement