மழையோடு சேர்ந்து விளையாடிய விதி, அரிதான பெனால்டியால் பறிபோன தெ.ஆ’வின் வெற்றி – ரூல்ஸ் கூறுவது என்ன?

De Kock Gloves Penalty Umpire
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 24ஆம் தேதியன்று ஜிம்பாப்வே – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஹோபார்ட் நகரில் மழையால் தலா 9 ஓவர்களாக் குறைக்கப்பட்டு நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 79/5 ரன்கள் சேர்த்தது. கேப்டன் சகப்வா 8, கேப்டன் எர்வின் 2, சீன் வில்லியம்ஸ் 1, சிகந்தர் ராசா 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மாதவேர் 35* (18) ரன்கள் எடுத்தார்.

அதன்பின் 80 ரன்களை சேசிங் செய்ய தயாரான தென்ஆப்பிரிக்காவை மீண்டும் மழை தடுத்து நிறுத்தியது. அதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி மீண்டும் 7 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு கொண்டு வரப்பட்டது. அதை துரத்திய களமிறங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு ஒருபுறம் சுமாரான பார்மில் இருக்கும் கேப்டன் தெம்பா பவுமா பெயருக்காக 2* (2) ரன்கள் எடுக்க மறுபுறம் விஸ்வரூபம் எடுத்த மற்றொரு தொடக்க வீரர் குவின்டன் டி காக் எரிமலையாக வெடித்து ஜிம்பாப்வே பவுலர்களை அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

மழையும் விதியும்:
ஏனெனில் முதல் ஓவரில் 23 ரன்களை குவித்து அவர் 2வது ஓவரில் 39 ரன்களையும் 3வது ஓவரில் 47 ரன்களையும் எட்டினார். அதனால் வெறும் 3 ஓவரிலேயே 51/0 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா வெற்றியை நெருங்கிய போது மீண்டும் வந்த மழை போட்டியை மொத்தமாக ரத்து செய்தது. அதனால் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 47* (18) ரன்கள் குவித்து போராடிய குயின்டன் டி காக் போராட்டம் வீணான நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. முன்னதாக கடந்த 1992 மற்றும் 2003இல் நடைபெற்ற உலக கோப்பையிலும் இதே போல் முக்கிய போட்டிகளில் வெற்றியை நெருங்கிய தென் ஆப்பிரிக்காவை மழை தடுத்து நிறுத்தியது.

இறுதியில் அது நாக் அவுட் சுற்றுக்கு செல்லவிடாமல் தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதே மழை ஆரம்பத்திலேயே விளையாடியுள்ளதால் எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என அந்நாட்டு ரசிகர்கள் வேதனையை தெரிவிக்கிறார்கள். அதை விட இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு ஆன்றிச் நோர்ட்ஜே வீசிய 9வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட மில்டன் சும்பா ரிவர்ஸ் ஸ்கூப் அடிக்க முயற்சித்தும் முடியவில்லை.

- Advertisement -

இருப்பினும் அவரது பேட்டில் பட்ட பந்து ஃபைன் லெக் திசைக்கு சென்றது. அதை தடுத்து நிறுத்திய லுங்கி நிகிடி பந்தை கையிலெடுத்து விக்கெட் கீப்பரான குயின்டன் டி காக் நோக்கித் தூக்கி ஏறித்தார். அப்போது தோனி ஸ்டைலை பயன்படுத்திய டி காக் ஒற்றை கிளவ்ஸை கழற்றி களத்தில் போட்டுவிட்டு பிடிக்க முயற்சித்தார். ஆனால் அவரது முழங்கால் முன்னே களத்தில் பிட்ச்சாகி பவுன்ஸ் ஆன பந்து அவருடைய முழங்காலில் பட்டு மீண்டும் தரையில் பட்டு அப்படியே அலுங்காமல் குலுங்காமல் கீழே கிடந்த கிளவ்ஸ் மீது பட்டது. பொதுவாக விக்கெட் கீப்பர்களின் ஹெல்மெட் உட்பட எந்த உபகரணங்களும் பந்தை தடுக்கும் வகையில் இருக்கக் கூடாது இல்லையே பெனால்டியாக 5 ரன்கள் வழங்கப்படும் என்பது அடிப்படை கிரிக்கெட் விதி முறையாகும்.

ஆனால் அந்த இடத்தில் அவருடைய கிளவ்ஸ் பந்தை தடுக்கவில்லை என்றாலும் கூட லேசாக உரசியதை உன்னிப்பாக கவனித்த நடுவர்கள் விதிமுறைப்படி உடனடியாக 5 பெனால்டி ரன்களை வழங்கி அதிரடி காட்டினார். அதனால் வர்ணனையாளர்களும் மற்றும் டீகாக் உட்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர்களும் என்ன நடந்தது என்று தெரியாமல் ரீப்ளேயில் பார்த்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த நிகழ்வு நொடிப் பொழுதில் அரங்கேறியது.

இதையும் படிங்க : இந்திய வீரர்களை எங்களின் அலீம் தாரிடம் ஸ்பெஷல் க்ளாஸ் எடுக்க அனுப்புங்க – 2 பாக் வீரர்கள் கொந்தளிப்பு

இந்த இடத்தில் விஷயம் என்னவெனில் அந்த 5 எக்ஸ்ட்ரா ரன்கள் இல்லாமல் போயிருந்தால் 2வது முறையாக 7 ஓவர்களில் 64 ரன்கள் என உருவாக்கப்பட்ட புதிய இலக்கு இன்னும் குறைவாகி வெற்றி வாய்ப்பு அதிகமாகியிருக்கும். மேலும் 3 ஓவரின் முடிவில் 51/0 ரன்கள் எடுத்த தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோரை டிஎல்எஸ் விதிமுறையுடன் ஒப்பிடும் போது வெற்றிக்கான வெற்றி வாய்ப்பு இன்னும் சற்று அதிகமாகியிருக்கும். அந்த வகையில் மழையும் விதிமுறையும் குயின்டன் டி காக் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியது வருத்தத்திற்குரியது.

Advertisement