இந்திய வீரர்களை எங்களின் அலீம் தாரிடம் ஸ்பெஷல் க்ளாஸ் எடுக்க அனுப்புங்க – 2 பாக் வீரர்கள் கொந்தளிப்பு

Kohli IND vs PAK
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது ரோகித், ராகுல், சூரியகுமார் என 3 முக்கியமான பேட்ஸ்மென்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இணைந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தி ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் 40 ரன்களில் அவுட்டானார்.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

அப்போது பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக் பதற்றத்தால் அவுட்டானாலும் அடுத்ததாக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் அதே தவறை செய்யாமல் ஆக்கப்பூர்வமாக தூக்கி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்த வெற்றியால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா பழி தீர்த்துள்ளது. இந்த அசாத்தியமான வெற்றியை 6 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (53) ரன்கள் குவித்து பெற்றுக்கொடுத்த விராட் கோலிக்கு சிறிய பரிசாக ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

ஸ்பெஷல் க்ளாஸ்:
இருப்பினும் பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியின் கடைசி ஓவரில் முகமது நவாஸ் வீசிய 4வது பந்து இடுப்பளவு வந்ததை கச்சிதமாக பயன்படுத்திய விராட் கோலி சிக்ஸர் அடித்து விட்டு நோ பால் கேட்டார். அதனால் பக்கவாட்டில் இருந்த நடுவர் நோ பால் கொடுத்ததால் வேண்டுமென்றே பணத்தை வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கு சாதகமாக நடுவர் செயல்பட்டதாகவும் அந்தப் பந்தை எதிர்கொள்ள விராட் கோலி கிரீஸ் விட்டு வெளியே வந்ததால் நோ-பால் இல்லை என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் ஒரு ஸ்பின்னர் போட்ட பந்து அவ்வளவு உயரமாக வந்ததுடன் அதை எதிர்கொள்ளும் போது விராட் கோலியின் பின்னங்கால் வெள்ளை கோட்டில் இருந்ததால் விதிமுறைப்படி அது நோ-பால் தான் என்று இந்திய ரசிகர்கள் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்தனர்.

Afridi

இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத சோயப் அக்தர் போன்ற முன்னாள் வீரர்கள் பணத்தை கொடுத்து வெற்றியை வாங்கி விட்டதாக விமர்சிக்கின்றனர். அந்த வரிசையில் இணைந்துள்ள மற்றொரு முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி கள நடுவர் நடுவர் மரஸ் எரஸ்மசுக்கு சந்தேகம் இருந்தால் 3வது நடுவரிடம் ஆலோசித்து நோ பால் பற்றிய இறுதி முடிவை அறிவித்திருக்க வேண்டும் என்று சாடியுள்ளார். இது பற்றி பிரபல தொலைக்காட்சியில் அவர் பேசியது வருமாறு.

- Advertisement -

“வரலாற்றில் நிறைய தருணங்களில் ரன் அவுட் செய்யும் போது களத்தில் இருக்கும் நடுவர்கள் உடனடியாக 3வது நடுவரின் உதவியை நாடுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியில் அந்த முக்கியமான நேரத்தில் கள நடுவர் 3வது நடுவரை தொடர்பு கொண்டு முடிவெடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அவ்வளவு சீக்கிரமாக முடிவெடுக்க உங்களிடம் கழுகு பார்வை கிடையாது” என்று கூறினார்.

Butt

அதே போல் மற்றொரு முன்னாள் வீரர் சல்மான் பட் இடுப்புக்கு கீழே வந்தும் விதியைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நோ-பால் கேட்ட விராட் கோலி போன்ற இந்திய வீரர்கள் அலீம் தார் போன்ற தங்களுடைய நாட்டின் தரமான நடுவர்களிடம் ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்து கிரிக்கெட் விதிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார். இது பற்றி தனது பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : அவரோட ஆட்டத்தை பார்த்து எனக்கு கப் ஆசையே போயிடுச்சி. இந்தியா தான் டாப்பு – மிட்சல் மார்ஷ் பிரமிப்பு

“அடிப்படை விதிமுறைகளைப் பற்றி பாகிஸ்தான் வீரர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். அதே போல் அலீம் தார், ஹசன் ராஜா போன்ற எங்களது நாட்டைச் சேர்ந்த நடுவர்கள் அதை சரியாக பின்பற்றி நடக்கிறார்கள். எனவே அவர்களிடம் (இந்திய) வீரர்கள் க்ளாஸ் வந்து தங்களுடைய சந்தேகத்தைக் கேட்டு பதிலை கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற நிகழ்வுகள் அரிதாக அழுத்தமான சூழ்நிலைகளில் நடைபெறும்” என்று கூறினார்.

Advertisement