அவரோட ஆட்டத்தை பார்த்து எனக்கு கப் ஆசையே போயிடுச்சி. இந்தியா தான் டாப்பு – மிட்சல் மார்ஷ் பிரமிப்பு

Mitchell-Marsh
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான ஆட்டமாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று முன்தினம் மெல்போர்ன் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 82 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பல்வேறு வீரர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வேளையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டான மிச்சல் மார்ஷ் விராட் கோலி குறித்தும் அந்த போட்டி குறித்தும் கூறியதாவது : மெல்போர்ன்னில் இதைவிட ஒரு சிறப்பான போட்டி இதுவரை நடைபெற்றதில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படும்.

VIrat Kohli IND vs PAK

ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் விட நம்பவே முடியாத அளவிற்கு ஒரு அட்டகாசமான ஆட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. என்னால் இதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. கோலியின் இந்த ஆட்டத்தை பார்த்த பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றும் எங்களது எண்ணத்தையும் அங்கேயே நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் அப்படி ஒரு சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்காக விராட் கோலி வழங்கியுள்ளார். அவரைப் பற்றி நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த 12 மாதங்கள் வரை கடினமான சூழ்நிலையை எதிர்கொண்ட அவர் தற்போது உலக கோப்பையில் முத்திரை பதித்துள்ளார்.

இதையும் படிங்க : இதே டி20 உ.கோ’யில் மீண்டும் வந்து உங்கள பழி தீர்ப்போம் – படையப்பா நீலாம்பரி ஸ்டைலில் பாக் ஜாம்பவான் நம்பிக்கை

அவரது இந்த இன்னிங்ஸ் மறக்க முடியாத, நம்ப முடியாத ஒன்று என மிட்சல் மார்ஷ் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியானது இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளதால் இனிவரும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement