தற்போதுள்ள இந்திய அணியில் இவரை தான் எனக்கு மிகவும் பிடிச்சுருக்கு – கபில் தேவ் பாராட்டும் அவர் யார் தெரியுமா?

Kapil-Dev
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் கடந்த மார்ச் 4ஆம் தேதி அன்று துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை சுவைத்தது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 5-வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

Bumrah 1

- Advertisement -

இதையடுத்து இவ்விரு அணிகள் மோதி வரும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இலங்கையை பந்தாடிய இந்தியா 238 ரன்கள் வித்யாசத்தில் வென்று 2 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்தது.

மிரட்டிய ரவீந்திர ஜடேஜா:
முன்னதாக மொஹாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் விஸ்வரூபம் எடுத்த நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தியாவிற்கு தனி ஒருவனாக வெற்றியை எளிதாகப் பெற்றுக் கொடுத்தார் என்றே கூறலாம். ஏனெனில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவிற்கு ஆரம்பம் முதல் அபாரமாக பேட்டிங் செய்த அவர் கடைசி வரை அவுட்டாகாமல் இலங்கை அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து 175* ரன்கள் குவித்தார்.

Ravindra Jadeja

அதை தொடர்ந்து பந்துவீச்சிலும் மிரட்டிய அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை எடுத்து 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இப்படி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். அத்துடன் அந்தப் போட்டி நடந்த மொகாலி மைதானத்தில் ஹாட்ரிக் ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற மகத்தான பெருமையையும் அவர் பெற்றார். கடைசியாக மொஹாலி மைதானத்தில் கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்ற அவர் இப்போது நடந்த போட்டியிலும் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்று பிரமிக்க வைத்தார்.

- Advertisement -

ரொம்ப பிடிச்சுருக்கு:
இந்நிலையில் ஒரு ஆல்-ரவுண்டராக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வரும் ரவீந்திர ஜடேஜாவை இந்தியா கண்ட மகத்தான கேப்டன் மற்றும் ஜாம்பவான் ஆல் ரவுண்டர் கபில்தேவ் பாராட்டியுள்ளார். இதுபற்றி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு. “புதிய கிரிக்கெட் வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் எனக்கு மிகமிகப் பிடித்துள்ளது. ஏனெனில் அவர் போட்டியை பற்றிய எந்தவித அழுத்தமும் இல்லாமல் பயமின்றி சுதந்திரமாக விளையாடுகிறார். சொல்லப்போனால் அவர் கிரிக்கெட்டை மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்.

Kapil Dev Ravindra Jadeja

அதன் காரணமாகவே அவரின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மிகச் சிறப்பாக உள்ளது. அவரின் பீல்டிங்க்கும் எதிரணியை அச்சுறுத்தும் வகையில் அதிரடியாக உள்ளது. பொதுவாகவே ப்ரசரில் விளையாட்டினால் எதையுமே சிறப்பாக செய்ய முடியாது. எப்போதுமே போட்டியில் அழுத்தத்தோடு விளையாடினால் நமது செயல்பாடுகள் மோசமாகத்தான் இருக்கும்” என பாராட்டினார். அதாவது எவ்வளவு அழுத்தம் நிறைந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் கிரிக்கெட்டை மகிழ்ச்சியோடு விளையாடுவதால் தான் ரவீந்திர ஜடேஜாவால் இந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட முடிகிறது என கபில்தேவ் பாராட்டினார்.

- Advertisement -

மேலும் சமீப காலங்களாக இந்திய அணிக்கு தொடர்ந்து விளையாடி வரும் புதிய கிரிக்கெட் வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவை தான் தமக்கு பிடித்துள்ளதாக அவர் கூறினார். இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மகத்தான ஆல்-ரவுண்டராக கருதப்படும் கபில் தேவ் மற்றொரு வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டராக விளங்கும் ரவீந்திர ஜடேஜாவை பிடிக்கிறது எனக் கூறுவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்றே கூறலாம்.

jadeja

கபில் தேவ் வழியில் ஜடேஜா:
கபில் தேவ் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இந்தியாவின் பல வெற்றிகளின் பங்காற்றினார் என நமக்கு தெரியும். இருப்பினும் அவரைப் போல இல்லை என்றாலும் சுழல்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா அவரின் வழியில் கடந்த சில வருடங்களாக தம்மால் முடிந்த அளவு முழு மூச்சுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக இலங்கைக்கு எதிராக மொகாலி டெஸ்ட் போட்டியில் 175* ரன்கள் அடித்த அவர் டெஸ்ட் போட்டிகளில் 7-வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேன் என்ற ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். மேலும் அப்போட்டியில் 9 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 150+ ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற மகத்தான உலக சாதனையும் படைத்தார்.

இதையும் படிங்க : டேல் ஸ்டெயினை மட்டுமல்ல ஷேன் வார்னேவையும் ஓரங்கட்டிய தமிழகவீரர் அஷ்வின் – அசத்தல் சாதனை

மொத்தத்தில் கபில் தேவுக்கு பிடித்த ரவீந்திர ஜடேஜா அவரைப் போலவே அவரின் வழியில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருவது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாகும்.

Advertisement