டேல் ஸ்டெயினை மட்டுமல்ல ஷேன் வார்னேவையும் ஓரங்கட்டிய தமிழகவீரர் அஷ்வின் – அசத்தல் சாதனை

Ash
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதானத்தில் இன்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இலங்கை அணியின் வெற்றிக்கு 447 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. அதனை துரத்தி விளையாடிய இலங்கை அணி 208 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இந்திய அணியானது 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை வாஷ் அவுட் செய்துள்ளது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

INDvsSL cup

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 8-வது பந்துவீச்சாளர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயினை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை இதுநாள் வரை தென் ஆப்பிரிக்கா கண்ட மகத்தான வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் டேல் ஸ்டெயின் 93 போட்டிகளில் 439 விக்கெட்டுகளை எடுத்து தன்வசம் வைத்திருந்தார். ஆனால் தற்போது 86 போட்டிகளில் 442 விக்கெட்டுகள் எடுத்துள்ள அஸ்வின் அவரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த 4-வது பந்து வீச்சாளர் என்ற ஜாம்பவான் ஷேன் வார்னேவை முந்திய அஸ்வின் புதிய பெருமை பெற்றார். இதற்கு முன்பு வரை வார்னே இலங்கை அணிக்கு எதிராக 59 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். தற்போது அஸ்வின் வெறும் 11 போட்டிகளில் 62 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதே பட்டியலில் முதல் 3 இடங்களில் இந்தியாவின் அனில் கும்ப்ளே (74 விக்கெட்கள்), பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் (66 விக்கெட்கள்) மற்றும் வாசிம் அக்ரம் (63 விக்கெட்கள்) ஆகியோர் உள்ளனர்.

Warne Ashwin Dale Styen

இந்த சாதனைப் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அடுத்ததாக மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது என்றே கூறலாம். ஏனெனில் இந்த பட்டியலில் தற்போது அவர் 8-வது இடத்தில் இருக்கும் நிலையில் 7-வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் 519 விக்கெட்களுடன் உள்ளார்.

- Advertisement -

அவரை முந்த வேண்டுமென்றால் அஸ்வினுக்கு இன்னும் 80 விக்கெட்கள் தேவைப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு 54 விக்கெட்டுகளை எடுத்த அவர் கடந்த வருட டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார். அந்த வகையில் தற்போது 35 வயதை கடந்துள்ள அவர் 7-வது இடத்தை பிடிக்க குறைந்தது இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : டிராவிட் முதல் டு பிளேஸிஸ் வரை : ஐபிஎல் தொடரில் ஆர்சிபி கேப்டன்களின் – பட்டியல் இதோ

இருப்பினும் அஷ்வின் நிச்சயம் குறைந்தது இன்னும் 30 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலாவது விளையாடுவார் என்பதனால் அஷ்வின் மென்மேலும் சாதனைகள் படைப்பார் என்பதை நம்பலாம். மேலும் இந்திய டெஸ்ட் வரலாற்றில் நிச்சயம் அஷ்வின் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்பதும் உறுதி.

Advertisement