- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டாப் 4ல விராட் கோலி கைல தான் அது இருக்கு.. 1 வெற்றியால் பும்ராவை இப்போவே தள்ளாதீங்க.. கபில் தேவ்

ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் மோசமாக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது.

அந்த தோல்விக்கு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோகித் சர்மா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் பேசாமல் பும்ராவே கேப்டனாக தொடரலாம் என்று இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. அதே போல நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் போட்டியில் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பியதால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

டாப் 4 விராட் கோலி:

ஆனால் 2வது போட்டியில் மீண்டும் பழைய மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் அடுத்த போட்டிகளில் இந்தியா வெல்வதற்கு அவரும் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விராட் கோலிக்கு இந்த சமயத்தில் அசத்துவதற்கான ஆலோசனை தெரிவியுங்கள் என்று ஜாம்பவான் கபில் தேவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் விராட் கோலிக்கு தாம் என்ன ஆலோசனை தெரிவிக்க முடியும் என்று கபில் தேவ் கூறிவிட்டார். மேலும் ஒரு வெற்றியை வைத்துக்கொண்டு உடனடியாக ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டன்ஷிப்பில் தள்ள முயற்சிப்பது சரியான முடிவல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கபில் தேவ் கருத்து:

“விராட் கோலி நம்முடைய நாட்டில் நாம் பார்த்த சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவர். நம்முடைய டாப் 4 பேட்ஸ்மேன்களை நீங்கள் பட்டியலிட்டால் அதில் விராட் கோலி இருப்பார். எனவே கடினமான காலங்களில் இருந்தால் அதிலிருந்து எப்படி வேகமாக மீண்டு வர முடியும் என்பது அவருடைய கையில் தான் இருக்கிறது. ஒரு வெற்றியை மட்டும் வைத்துக் கொண்டு அது சிறந்தது என்று சொல்ல முடியாது”

இதையும் படிங்க: பும்ராவை விட ஷமி தான் சிறந்த பவுலர்.. சிராஜ் நெருங்கவே முடியாது.. காரணம் இது தான்.. ஜாம்பவான் ராபர்ட்ஸ்

“அதே போல ஒரு மோசமான தோல்வியை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட நபர் அதற்கு தகுதியானவர் கிடையாது என்றும் உங்களால் சொல்ல முடியாது. முதலில் ஒரு வீரரை நிறைய விளையாடி கேப்டன்ஷிப் பற்றி கற்றுக் கொள்ள விடுங்கள். அங்கே மேடு பள்ளங்கள் வரும். அப்போது மோசமான காலங்களில் தான் ஒருவரை நீங்கள் மதிப்பிட முடியும். நல்ல நேரங்களில் ஒருவரை மதிப்பிடுவது சரியாக இருக்காது” என்று கூறினார்.

- Advertisement -