பும்ராவை விட ஷமி தான் சிறந்த பவுலர்.. சிராஜ் நெருங்கவே முடியாது.. காரணம் இது தான்.. ஜாம்பவான் ராபர்ட்ஸ்

Andy Roberts
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் சுமாரான பேட்டிங் காரணமாக அமைந்தது.

அதே போல பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தார். ஹர்ஷித் ராணா அடி வாங்கிய நிலையில் முகமது சிராஜ் விக்கெட்டுகளுக்கு நிகராக ரன்களை வாரி வழங்கினார். அதனால் 3வது போட்டியில் இந்தியா வெல்ல வேண்டுமெனில் முகமது ஷமி விளையாடுவது அவசியம் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கருதுகிறார்கள்.

- Advertisement -

சிறந்த ஷமி:

ஆனால் இன்னும் 100% குணமடையாததால் அவர் நான்காவது போட்டியில் தான் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்திய அணியில் பும்ராவை விட ஷமி தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் பாராட்டியுள்ளார். ஆனால் அந்த இருவரையும் முகமது சிராஜால் நெருங்க கூட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மிட்-டே இணையத்தில் அவர் கூறியது பின்வருமாறு. “ஷமி இந்தியாவின் சிறந்த பவுலராக நீண்ட காலமாக இருந்து வருகிறார். ஜஸ்ப்ரித் பும்ரா அளவுக்கு அவர் விக்கெட்டுகளை எடுக்காமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவின் மற்ற பவுலர்களை விட அவர் தொடர்ச்சியாக அசத்தக்கூடிய முழுமையான பேக்கேஜ். ஷமி பந்தை ஸ்விங், சீம் செய்கிறார்”

- Advertisement -

ராபர்ட்ஸ் பாராட்டு:

“பும்ரா போலவே அவரும் நல்ல கட்டுப்பாட்டை கொண்டுள்ளார். எனவே ஷமி கண்டிப்பாக விளையாட வேண்டும். முகமது சிராஜ் அவருக்கு அருகில் கூட இல்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல 2023 உலகக் கோப்பையில் பும்ராவை விட மிரட்டலாக பந்து வீசிய ஷமி 24 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெரும்பாலும் துல்லியமாக பந்து வீசும் பவுலராக அறியப்படுகிறார்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்ல இன்னும் – என்னென்ன வழிகள் இருக்கு?

மேலும் 2013 முதல் இந்தியாவுக்காக விளையாடும் அவர் பும்ராவை விட அனுபவம் கொண்டவராகவும் இருக்கிறார். எனவே அவர் விரைவில் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும். ஏனெனில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அடுத்த 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

Advertisement