2023 உ.கோ : கடைசி நேரத்தில் அப்டி நடந்தா என்ன பண்ணுவீங்க? இந்தியாவில் திறமைக்கா பஞ்சம் – தேர்வுக்குழுவை விமர்சித்த கபில் தேவ்

- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலமாக துவங்குகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதற்கு தயாராகும் வகையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் 2023 ஆசிய கோப்பையில் களமிறங்குவதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Asia Cup INDIA

- Advertisement -

அந்த 17 பேர் கொண்ட அணியிலிருந்து தான் உலகக்கோப்பையில் விளையாடப் போகும் இறுதிக்கட்ட 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்படும் என்றே சொல்லலாம். அந்த சூழ்நிலையில் காயத்தை சந்தித்திருந்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அதிலிருந்து குணமடைந்து இந்த ஆசிய கோப்பையில் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நம்பர் 4வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

கபில் தேவ் கவலை:
இருப்பினும் அந்த இருவருமே காயத்திலிருந்து குணமடைந்திருந்தாலும் இதுவரை முதன்மை போட்டிகளில் விளையாடாமல் நேரடியாக ஆசிய மற்றும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் களமிறங்குவது பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சாதாரண பயிற்சி போட்டிகளில் விளையாடுவதற்கும் முதன்மையான போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை விட கடந்த 3 – 6 மாதங்களுக்கு மேல் சர்வதேச அளவில் விளையாடாத அவர்கள் தற்சமயத்தில் எந்தளவுக்கு ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதும் தெரியாது.

KL rahul Shreyas Iyer

அதிலும் குறிப்பாக ஏற்கனவே தடவலாக செயல்பட்ட ராகுல் தற்போது மீண்டும் புதிதாக லேசான காயத்தை சந்தித்திருப்பதால் ஆசிய கோப்பையில் ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரைப் போன்ற வீரர்கள் கட்டாயம் ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்படுவதற்கான அவசியம் என்ன? என்று நிறைய முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் கடந்த 2022 டி20 உலகக்கோப்பைக்கு முன் குணமடைந்த பும்ரா கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது போல் இந்த வீரர்கள் காயத்தை சந்தித்து வெளியேறினால் என்ன செய்வது? என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக களமிறங்கும் அவர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பும் கபில் தேவ் இந்தியாவில் திறமைக்கா பஞ்சம் என ஃபிட்டான ஆசிய கோப்பை இந்திய அணியை தேர்வு செய்யாத தேர்வுக்குழு மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு வீரர்களும் சோதனை செய்யப்பட வேண்டும். இருப்பினும் உலகக்கோப்பை நெருங்கியும் அது போன்ற வீரர்களுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை”

“ஒருவேளை உலகக்கோப்பையில் வந்த பின் அவர்கள் காயத்தை சந்தித்தால் என்ன செய்வது? அது போன்ற நிலைமை மொத்த அணியையும் பாதிக்கும். எனவே தற்போது அவர்கள் பேட்டிங் அல்லது பவுலிங் செய்து தங்களுடைய ஃபார்மை தொடர்ந்து செல்ல வேண்டும். ஆனாலும் உலகக் கோப்பையில் அவர்கள் காயத்தை சந்தித்தால் அதற்காக அறிவிக்கப்பட்ட அணியில் இடம் பெறாத வீரர்களுக்கு நியாயமற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே காயத்தை சந்தித்துள்ள வீரர்கள் தற்போது விளையாடுவதற்கான வாய்ப்பு தர வேண்டும். அதில் அவர்கள் ஃபிட்டாக இருந்தால் மட்டுமே உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட வேண்டும்”

இதையும் படிங்க:தோனி கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டது இதுதான். அவரும் எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணியிருக்காரு – ருதுராஜ் ஓபன்டாக்

“இந்தியாவில் திறமைக்கு எப்போதும் பஞ்சமில்லை. எனவே ஒருவேளை அவர்கள் ஃபிட்டாக இல்லாமல் போனால் கடைசி நேரத்தில் இந்தியா தனது உலகக்கோப்பை அணியில் மாற்றங்களை செய்ய நேரிடும். ஆசிய மற்றும் உலகக் கோப்பைக்கான உருவாக்குவதற்கான நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் இந்த வீரர்களும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஆனால் அதில் யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் நிச்சயமாக அவர்கள் அணியில் இருக்கக் கூடாது. எனவே இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் நீங்கள் சிறந்த ஃபிட்டான அணியை தேர்வு செய்ய வேண்டும்” என கூறினார்.

Advertisement