தோனி கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டது இதுதான். அவரும் எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணியிருக்காரு – ருதுராஜ் ஓபன்டாக்

Ruturaj-Gaikwad
- Advertisement -

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் இரண்டாவது போட்டியின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினார். அந்த போட்டியில் 43 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 58 ரன்கள் குவித்து இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார்.

Samson-and-Ruturaj

- Advertisement -

பும்ரா கேப்டனாகவும், ருதுராஜ் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட இந்த டி20 தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்து அணியை வீழ்த்தியது. அதிலும் குறிப்பாக இரண்டாவது போட்டியின் போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களான ருதுராஜ், சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த தொடர் முடிந்த கையோடு அடுத்ததாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி சீனாவிற்கு சென்று ஏசியன் கேம்ஸ் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் தோனியின் தலைமையில் தான் கேப்டன்சியை எவ்வாறு கற்றுக் கொண்டேன் என்பது குறித்தும் ருதுராஜ் மனம்திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Ruturaj Gaikwad CSk.jpeg

இது குறித்து அவர் கூறுகையில் : கேப்டனாக இருப்பது உண்மையிலேயே ஒரு சவாலான காரியம் தான். ஆனாலும் தோனி எனக்கு கொடுத்த அறிவுரைகள் மூலம் என்னால் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். அவர் எப்பொழுதுமே என்னிடம் ஒரே விடயத்தை தான் கூறுவார். அதன்படி ஒவ்வொரு போட்டியையும் நாம் புதிதாக அணுக வேண்டும்.

- Advertisement -

எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் நடைபெறும் போட்டியின் முடிவுக்காக நாம் நமது பங்களிப்பை வழங்க வேண்டும். நம்முடைய செயல்பாடு சிறப்பாக இருந்தால் முடிவுகள் தானாக கிடைக்கும் என்று தோனி கூறிக் கொண்டே இருப்பார். அதேபோன்று கேப்டனாக இருப்பதால் எனக்கும் நல்ல நம்பிக்கை கிடைக்கும். அதே போன்று அணியில் உள்ள 10 வீரர்களின் நிலையிலும் நான் யோசித்து அவர்களையும் வழிநடத்த முடியும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2023 : அவர மாதிரி தரமான ஸ்பின்னர் இந்தியாவிலேயே இல்லாத போது ஏன் கழற்றி விட்டீங்க? தேர்வுக்குழுவை சாடிய ஹர்பஜன்

நிச்சயம் தோனியிடம் இருந்து கற்றுக் கொண்ட அனுபவங்கள் எனக்கு கேப்டன்சியில் பெரிய அளவில் உதவும் என்று கூறினார். மேலும் ரிங்கு சிங் குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரிங்கு சிங் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபித்துள்ளார். அதேபோன்று தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் தனது முதிச்சியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவதாக ருதுராஜ் அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement