ஆசிய கோப்பை 2023 : அவர மாதிரி தரமான ஸ்பின்னர் இந்தியாவிலேயே இல்லாத போது ஏன் கழற்றி விட்டீங்க? தேர்வுக்குழுவை சாடிய ஹர்பஜன்

Harbhajan-Singh
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது நம்பர் 4வது பேட்டிங் செய்யும் வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் இந்த அணியில் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமாராகவே செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் நேரடியாக தேர்வாகியுள்ளதும் சஞ்சு சாம்சன் பேக்-அப் வீரராக மட்டும் இடம் பிடித்துள்ளதும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Asia-Cup

- Advertisement -

அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பையில் இடம் பெறாத வீரர்கள் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஆசிய கோப்பை அணியில் அசத்தும் 15 வீரர்கள் தான் இறுதிக்கட்ட உலகக்கோப்பை அணியிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

தரமான ஸ்பின்னர்:
அந்த கோணத்தில் பார்க்கும் போது இந்த அணியில் கழற்றி விடப்பட்டுள்ள நட்சத்திர முதன்மை ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹால் உலகக் கோப்பையிலும் இடம் பிடிப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. ஹரியானாவைச் சேர்ந்த அவர் கடந்த 2017இல் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு 2019 உலகக்கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடி நாளடைவில் ஃபார்மை இழந்ததால் 2021 டி20 உலக கோப்பையில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று மீண்டும் கம்பேக் கொடுத்த அவருக்கு 2022 டி20 உலகக் கோப்பையில் அஸ்வின் இருந்த காரணத்தால் விளையாடும் 11 பேர் அணியில் இடம் கிடைக்கவில்லை.

Yuzvendra-Chahal

அந்த நிலைமையில் இந்த உலகக்கோப்பையிலாவது தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சற்று அதிகமாக ரன்களை வாரி வழங்கியதால் ஆசிய கோப்பை அணியிலேயே கழற்றி விடப்பட்டுள்ளார். மறுபுறம் நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவும் சற்று அதிகமாக பேட்டிங் செய்யும் திறமை கொண்ட அக்சர் படேலும் அவரை பின்னுக்கு தள்ளி ஸ்பின்னர்களாக இந்த ஆசிய கோப்பை அணியில் தேர்வாகியுள்ளனர்.

- Advertisement -

ஆனாலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சஹால் போன்ற மணிக்கட்டு ஸ்பின்னர் இந்தியா வெற்றி பெறுவதற்கு அவசியம் என சௌரவ் கங்குலி, டாம் மூடி போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலேயே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தற்சமயத்தில் நம்பர் ஒன் ஸ்பின்னராக இருக்கும் சஹால் ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் உலக கோப்பையிலாவது அவரை தேர்வு செய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

Kuldeep-and-Chahal

குறிப்பாக தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இல்லை என்பதற்காக அவர் மோசமான பவுலராகி விட மாட்டார் என்று தெரிவிக்கும் ஹர்பஜன் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இந்த அணியில் யுஸ்வேந்திர சஹால் இல்லை என்பது மட்டுமே பின்னடைவு என்று நான் கருதுகிறேன். ஏனெனில் லெக் ஸ்பின்னரான அவர் பந்தை வெளியே திருப்பும் அளவுக்கு திறமை கொண்டவர். ஒரு நல்ல ஸ்பின்னரை பற்றி நீங்கள் பேசும் போது இந்தியாவில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரை விட அசத்தும் ஒரு ஸ்பின்னர் இல்லை என்று நான் சொல்வேன்”

- Advertisement -

“கடந்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதை நான் அறிவேன். அதற்காக அது அவரை மோசமான பவுலராக மாற்றாது. அவர் இந்திய அணியில் இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன். அதனால் இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு மூடப்படவில்லை என்றும் நான் நம்புகிறேன். மேலும் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் மேட்ச் வின்னரான அவரை தேர்வு செய்வது அவசியமாகும்”

Harbhajan

இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2023 : 712 விக்கெட்ஸ் எடுத்து என்ன பயன்? இந்திய அணியில் அஸ்வின் சரியா நடத்தப்படல – 2 முன்னாள் வீரர்கள் விமர்சனம்

“தற்சமயத்தில் அவர் நல்ல ஃபார்மில் இல்லை என்பதால் நீங்கள் ஓய்வு கொடுத்துள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர் அணியுடன் இருந்திருந்தால் அவருடைய தன்னம்பிக்கை அப்படியே இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். எந்த ஒரு வீரரும் டிராப் செய்த பின் திரும்ப வரும் போது சிறப்பாக விளையாடுவதற்கான அழுத்தத்தை சந்திப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement