எப்போ பாரு எதையாவது பேசுவதே வேலையா? விராட் கோலி – ரோஹித் சர்மா வருங்காலம் பற்றி கபில் தேவ் பதிலடி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் செமி ஃபைனலில் சிறப்பாக விளையாடிய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சீனியர் வீரர்கள் என்பதற்கு அடையாளமாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போராடியும் வெற்றி காண முடியாமல் தோல்வியை சந்தித்து களத்திலேயே கண்கலங்கி நின்றது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

இந்த நிலைமையில் மீண்டும் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அந்த இருவருக்குமே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

கபில் தேவ் பதிலடி:
அதனால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்குவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதற்கேற்றார் போல் கடந்த 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் அவர்கள் இருவருமே மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் கூட விளையாடாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் டி20 கேரியர் முடிந்ததாகவும் அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவது சந்தேகம் என்றும் கருத்துக்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் எதற்கெடுத்தாலும் எதைப்பற்றியாவது பேசுவதை நிறுத்த வேண்டும் என்று ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் மற்றும் ரோகித் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான முடிவை தேர்வு குழுவினர் தான் எடுக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது இந்திய அணி தேர்வு குழு உறுப்பினரின் வேலையாகும். எனவே இதை நாம் அவர்களிடம் விட்டு விட வேண்டும். மேலும் அனைத்து அம்சங்களிலும் நாம் கருத்துக்களை சொல்வது நல்லதல்ல. ஆனால் இது பற்றி முடிவெடுப்பது தேர்வு குழுவினரின் பொறுப்பாகும். ஒருவேளை அவர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உலககோப்பை விளையாடுவதற்கு சரியானவர்கள் என்று கருதினால் கண்டிப்பாக தேர்வு செய்யப்பட வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: உலகக் கோப்பை தோல்வியால் அவரோட கேரியர் முடிய போறதில்ல.. இன்னும் நிறைய சாதிப்பாரு.. சச்சின் பாராட்டு

அந்த வகையில் 2023 உலக கோப்பையில் விராட் கோலி 765 ரன்கள், ரோகித் சர்மா 597 ரங்களும் எடுத்து பல இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் தங்களுடைய அனுபவத்தால் அசத்தினார்கள். எனவே கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்களின் பொறுப்பேற்ற ஆட்டத்தால் தான் 2023 உலகக் கோப்பையில் தோல்வி கிடைத்தது என்பதை கருத்தில் கொண்டு விராட் மற்றும் ரோஹித் தொடர்ந்து விளையாடுவது இந்தியாவின் வெற்றிக்கு அவசியமாகும்.

Advertisement