- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விமர்சிக்க மாட்டேன்.. அது முடியும்னா விளையாடுங்க இல்லனா ஓய்வை அறிவிங்க.. ரோஹித், கோலிக்கு கபில் தேவ் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறலாம் என்று சில ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர்கள் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

அதன் காரணமாக ஏமாற்றத்தை சந்தித்த ரசிகர்கள் அந்த இருவரும் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறும் நேரம் வந்துள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற பெரிய வீரர்களை பற்றி பேசி தாம் விமர்சிக்க விரும்பவில்லை என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார். அதே சமயம் தங்களால் முடியும் என்று நினைத்தால் அவர்கள் தொடரலாம் என கபில் தேவ் ஆதரவு கூறியுள்ளார்.

- Advertisement -

முடியும்ன்னா ஆடுங்க:

ஒருவேளை தங்களால் அசத்த முடியாது என்று கருதினால் வருங்காலத்திற்கு வழி விட்டு ஓய்வு பெற வேண்டும் என்றும் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் எப்படி மற்றவர்களுடைய மதிப்பீட்டில் கருத்தை சொல்ல முடியும்? அதைப் பற்றி தேர்வாளர்கள் சிந்திப்பார்கள் என்று நினைக்கிறேன்”

“எனவே நான் ஏதாவது சொன்னால் அது அவர்களை விமர்சிப்பதாக இருக்கும். ஆனால் நான் அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை. இந்திய அணியில் இருக்கும் முக்கிய குழுவினர் அதைப்பற்றி திட்டமிட்டு முடிவெடுத்திருப்பார்கள். அவர்கள் மிகப்பெரிய வீரர்கள். எனவே விளையாடுவதற்கு எது சரியான நேரம் எது சரியான நேரமல்ல என்பது அவர்களுக்கு தெரியும்”

- Advertisement -

இல்லனா ஓய்வு:

“அதற்கேற்றார் போல் அவர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை அறிவிப்பார்கள். மறுபுறம் அவர்களால் இப்போதும் முடியும் என்று தேர்வாளர்கள் நம்பினால் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு நம்பி வாய்ப்பும் நேரமும் வழங்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியில் விராட், ரோஹித் விளையாட உள்ளனர்.

இதையும் படிங்க: ஃபைனலில் அஸ்வினை கழற்றி விட்டது போல.. கருண் நாயரையும் அரசியலால் முடிக்கிறாங்க.. உத்தப்பா வருத்தம்

அதில் அவர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது. அதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் அடுத்த டெஸ்ட் தொடரில் அவர்கள் விளையாடுவார்கள். குறிப்பாக விராட் கோலியை விட ரோகித் சர்மா மோசமான ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் அடுத்தடுத்த போட்டிகளில் அசத்தவில்லை எனில் கழற்றி விடப்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -