ஃபைனலில் அஸ்வினை கழற்றி விட்டது போல.. கருண் நாயரையும் அரசியலால் முடிக்கிறாங்க.. உத்தப்பா வருத்தம்

Robin Uthappa
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் முச்சதத்தை அடித்தார். அதனால் வீரேந்திர சேவாக்கிற்கு பின் முச்சத்தை அடித்த இந்திய வீரராக சாதனை படைத்த அவர் அதற்கடுத்த சில போட்டிகளில் சுமாராக விளையாடியதால் 2017ஆம் ஆண்டுடன் கழற்றி விடப்பட்டார். ஆனால் அதன் பின் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வரும் அவருக்கு இந்திய அணியில் இதுவரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

குறிப்பாக 2024 – 2025 விஜய் ஹசாரே கோப்பையில் 112*, 44*, 163*, 111*, 112*, 122* என அவர் அவுட்டே ஆகாமல் பெரிய ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவுட்டே ஆகாமல் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையும் கருண் நாயர் படைத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியில் அஸ்வின் போலவே கருண் நாயரும் அரசியலால் வீழ்த்தப்பட்டுள்ளதாக ராபின் உத்தப்பா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அஸ்வின் போல:

இது பற்றி அவர் விரிவாக பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நீங்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லையெனில் ஏன் அவருக்கு சத்தியத்தை கொடுத்தீர்கள். அதற்கு பேசாமல் உங்களுக்கான சர்வதேச வாய்ப்பு முடிந்து விட்டது உள்ளூரில் மட்டும் விளையாடி ரன்கள் அடியுங்கள் என்று அவரிடம் நேரடியாக சொல்லி விடுங்கள். 300 ரன்கள் அடித்த சில போட்டிகளுக்குப் பின் கருண் நாயர் நீக்கப்பட்டார்”

“அவரைப் போல் நிறைய வீரர்கள் இந்திய கிரிக்கெட்டில் உள்ளனர். இந்தியாவில் தேர்வு என்று வரும் போது சில விஷயங்கள் விளையாடுகின்றன. எடுத்துக்காட்டாக கடந்த 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை பாருங்கள். முதலில் நீங்கள் அஸ்வினை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வேகத்துக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்று சொல்லி நீக்கினீர்கள். ஆனால் அவரால் தான் நீங்கள் பைனலுக்கே தகுதி பெற்றீர்கள்”

- Advertisement -

அரசியல் காரணம்:

“வெளிநாடுகளில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு ஸ்பின்னர் விளையாட வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் ஏன் நீங்கள் அஸ்வினை தேர்ந்தெடுக்கவில்லை. மார்பல் அல்லது பச்சை புற்கள் நிறைந்த ஆடுகளங்களில் கூட விக்கெட்டுகள் எடுக்கும் திறமை கொண்ட அவருக்கு பேட்டிங் தெரியாது என்று அர்த்தமல்ல. சொல்லப்போனால் அஸ்வின் எப்போதும் வித்தியாசமாக சிந்திக்கக் கூடியவர்”

இதையும் படிங்க: அபிமன்யு ஈஸ்வரனை இப்படி அசிங்கப்படுத்துறதுக்கு அவரை செலக்ட் பண்ணாமலே இருக்கலாம் – உத்தப்பா விளாசல்

“மொத்தத்தில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஃபைனலில் நீங்கள் அவரை தேர்ந்தெடுக்கவில்லை. உண்மையில் அந்த மைதானம் மூன்றாவது நாள் முதல் சுழலுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் அங்கே அஸ்வினுக்கு பதில் தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு அரசியல் கலாச்சாரமே காரணம். தென்னிந்தியாவில் இருக்கும் 4 – 5 மாநிலங்கள் வித்தியாசமான கலாச்சாரத்தை கொண்டது. ஆனால் மும்பை, டெல்லி, குஜராத், பஞ்சாப் போன்ற வடமாநில வீரர்களுக்கு அதிக ஆதரவு கொடுக்கப்படுகிறது” என்று கூறினார்.

Advertisement