உலககோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியதற்கு இவரே பதில் சொல்லனும் – கபில்தேவ் காட்டம்

Kapil-Dev
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது இந்திய அணிக்கு ஒரு மோசமான தொடராகவே அமைந்தது. ஏனெனில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்ற போது கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி தான் சந்தித்த முதல் 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணியை எளிதாக வீழ்த்தி இருந்தாலும் முதல் இரண்டு போட்டியில் பெரிய அணிகளிடம் தோற்றதால் இந்திய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ashwin

- Advertisement -

மேலும் இந்திய அணி கடைசி போட்டியில் இன்று நமீபியாவை வீழ்த்தி வெற்றி பெற்றாலும் அதில் எந்த ஒரு பயனும் இல்லை. இந்த போட்டியோடு இந்திய அணி நாடு திரும்ப வேண்டியது தான். இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு முழுக்க முழுக்க கேப்டன் விராட் கோலியே பொறுப்பு ஏற்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது காட்டமான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த உலகக் கோப்பை தொடர் துவங்கும் முன்னர் இந்தியா கோப்பையை வெல்லும் அணி என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் இந்த தொடரில் இருந்து வெளியேறுவது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தோல்விக்கு கேப்டன் கோலி தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதனை நாம் என்னவென்று சொல்ல முடியும் ?

Rahul-2

அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் தற்போது சரியான திட்டமிடல் மிகவும் அவசியம். ஐபிஎல் தொடருக்கும், உலக கோப்பை தொடருக்கும் இடைவெளி இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வீரர்கள் தங்களது முழுமையான திறனை வெளிப்படுத்த முடியும். வீரர்கள் நாட்டுக்காக விளையாடிவதில் பெருமை கொள்ள வேண்டும். முதலில் இந்தியா அதன் பிறகுதான் ஐபிஎல் போட்டியாக இனி இருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : க்றிஸ் கெயிலின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் – குவியும் வாழ்த்து

இனிவரும் காலங்களில் வீரர்கள் இது போன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என கபில்தேவ் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நமீபியா அணியை எதிர்த்து விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட இருக்கும் கோலி இந்த போட்டியோடு கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement