க்றிஸ் கெயிலின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் – குவியும் வாழ்த்து

Rizwan
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது சூப்பர் 12 சுற்றின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூப்பர் 12-சுற்றில் இரண்டு குழுவாக பிரிந்து விளையாடி வரும் 12 அணிகளில் 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளன. அதன்படி குரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் குரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் நேற்று ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

rizwan 1

- Advertisement -

இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 189 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய ஸ்காட்லாந்து அணி 117 ரன்கள் மட்டுமே குவித்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் ரிஸ்வான் 19 பந்துகளில் ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்நிலையில் இவர் இந்த போட்டியில் 5 ரன்களை கடந்தபோது டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்லின் முக்கியமான மிகப்பெரிய சாதனை ஒன்றினை முறியடித்து தனது தடத்தினை டி20 கிரிக்கெட் வரலாற்றில் பதித்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை ஒரு வருடத்தில் அதிக டி20 சர்வதேச ரன்களை அடித்து வீரராக கெயில் இருந்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் டி20 கிரிக்கெட்டில் 1665 ரன்கள் குவித்தது ஒரு ஆண்டில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது.

rizwan 2

இதனை இந்த ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் எடுத்திருந்த போது பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் ரிஸ்வான் தகர்த்தார். 2021 ஆம் ஆண்டு மட்டும் அவர் 1676 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி, பாபர் அசாம் மற்றும் டிவில்லியர்ஸ் போன்றோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி 2016 ஆம் ஆண்டு 1614 ரன்களும், பாபர் அசாம் 2019ஆம் ஆண்டு 1607 ரன்களும், டிவில்லியர்ஸ் 2019ஆம் ஆண்டு 1580 ரன்கள் குவித்து அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இது ஒன்னும் முதல்முறை கிடையாது. இந்தியா இப்படி சொதப்புவது 4-ஆவது முறையாம் – விவரம் இதோ

பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டரில் ஆடிவந்த முஹம்மது ரிஸ்வான் துவக்க வீரராக களம் இறங்கியதிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த ஓராண்டாகவே பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்து வருவதால் இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் பாகிஸ்தான் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement