இது ஒன்னும் முதல்முறை கிடையாது. இந்தியா இப்படி சொதப்புவது 4-ஆவது முறையாம் – விவரம் இதோ

shami

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் 12-சுற்றின் முடிவின்படி குரூப்-1ல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. இதன் காரணமாக தற்போது இந்திய அணி இந்த தொடரின் சூப்பர் 12-சுற்றோடு வெளியேறுகிறது. இந்த விடயம் இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ashwin

ஏற்கனவே சூப்பர் 12-சுற்றின் முதல் இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் காரணமாக அரையிறுதி வாய்ப்பு ஏதோ ஒரு மூலையில் ஊசல் ஆடிக் கொண்டிருக்க நேற்று நியூசிலாந்து அணி அதையும் முடித்து வைத்தது.

- Advertisement -

இதனால் இன்று நமீபியா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி விளையாடினாலும் அது ஒரு சம்பிரதாய போட்டியாகவே இருக்கும். ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டதால் இந்திய அணி இன்று எப்படி வெற்றி பெற்றாலும் இதோடு வெளியேற வேண்டியதுதான். இப்படி இந்திய அணியின் நிலை மோசமாக இருப்பது இது முதல்முறை கிடையாதாம். ஏற்கனவே இந்திய அணி இதேபோன்று அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது. அதுவும் ஒருமுறை, இருமுறை அல்ல இந்த தொடரோடு சேர்த்து நான்காவது முறையாக நடைபெறுகிறது.

bumrah 1

இதற்கு முன்னர் 2009, 2010, 2012 ஆகிய மூன்று சீசன்களில் தொடர்ந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 2021-ஆம் ஆண்டு நான்காவது முறையாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது. இன்று கடைசி போட்டியில் விளையாடும் இந்திய அணியானது இரவு 7.30க்கு நமீபியா அணியை எதிர்த்து விளையாடுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய வீரர்களுக்கு இருந்த பிரச்சனை உண்மைதான் – வெளிப்படையாக பேசிய பவுலிங் கோச்

இந்திய அணிக்கு இந்த போட்டி ஒரு சம்பிரதாய போட்டியாகவே இருக்கும். இதனால் சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இதுவரை இந்த தொடரில் விளையாடாத சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த போட்டியுடன் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதால் அவர் இந்த போட்டியில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement