இந்திய வீரர்களுக்கு இருந்த பிரச்சனை உண்மைதான் – வெளிப்படையாக பேசிய பவுலிங் கோச்

Bharath-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது இந்திய அணிக்கு மிக மோசமாக அமைந்தது என்று கூறலாம். ஏனெனில் சூப்பர் 12-சுற்றின் குரூப்-2 இடம்பெற்றிருந்த இந்திய அணியானது பெரிய அணிகளான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணியை அடித்து நொறுக்கிய இந்தியா நமீபியாவையும் எளிதாக வீழ்த்தி விடும் என்பது உறுதி. ஆனால் பெரிய அணிகளுக்கு இடையே இந்திய அணி சொதப்பியதால் அரையிறுதி கூட செல்லாமல் சூப்பர் 12-சுற்றோடு வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

bumrah 1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி இப்படி சொதப்பியதற்கான காரணங்களை பலரும் சமூக வலைதளம் வாயிலாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் தற்போது இந்திய அணி சொதப்பியதற்கு என்ன காரணம் என்பது குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி அளிக்கையில் கூறியதாவது :

கிரிக்கெட்டில் டாஸ் பெரிய அளவில் வெற்றியாளரை தீர்மானிக்காது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் டாஸ் என்பது முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இங்குள்ள ஆடுகளங்களில் முதலில் பேட்டிங் செய்வதற்கும், இரண்டாவது பேட்டிங் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அதேபோல இந்திய வீரர்கள் சொதப்பியதற்கு ஐபிஎல் தொடர் தான் காரணமா ? என்ற கேள்வியும் அதிகளவு எழுதுகிறது.

IND

ஒருவகையில் அதுவும் உண்மைதான். ஏனெனில் ஐபிஎல் இந்தியாவில் துவங்கிய பிறகு பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு ஆறு மாதங்களாக இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு இல்லாமல் வெளிநாட்டு பயணங்கள் இருந்தன. இது போன்ற வெளிநாடுகளில் இந்திய அணி தொடர்ந்து விளையாடும்போது பயோ பபுளில் இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 23 வயதிலேயே இப்படி ஒரு சாதனையா ? போறபோக்க பாத்தா இவரை மிஞ்ச யாராலும் முடியாது – ரஷீத் கான் சாதனை

இதுவும் மனரீதியாக வீரர்களின் ஆட்டத்தை பாதிக்கும். தொடர்ச்சியாக பயோ பபுளில் இருப்பதும் ஓய்வின்றி இந்திய அணி வீரர்கள் விளையாடியதும் உலகக் கோப்பையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர் ஆகிய இரண்டிற்கும் இடையே போதிய இடைவெளி இருந்திருந்தால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என்று அவர் வெளிப்படையாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement