சாம்சன மட்டும் குறை சொல்லாதீங்க, விராட், ரோஹித் அந்த எத்தனை மேட்ச்ல ஆடுனாங்க? கபில் தேவ் நெத்தியடி கேள்வி

Kapil Dev 5
- Advertisement -

சர்வதேச அளவில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களை 90 வருடங்களாக உள்ளூர் போட்டிகள் தான் உருவாக்கிக் கொடுத்து வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக 90 வருடங்களாக நடைபெற்று வரும் பழமை வாய்ந்த ரஞ்சி டெஸ்ட் தொடரிலிருந்து தான் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற மகத்தான வீரர்கள் கிடைத்தனர். அதே போல நவீன கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கேற்ப ஒருநாள் போட்டிகளுக்கு தேவையான வீரர்களை உருவாக்குவதற்காக விஜய் ஹசாரே கோப்பை தொடரும் டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரும் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது.

இந்த வகையான தொடர்களில் தொடர்ந்து வருடக் கணக்கில் சிறப்பாக விளையாடும் வீரர்களே இந்தியாவுக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஆனால் அந்த நிலைமை தற்போது மாறி ஐபிஎல் தொடரில் ஒரு வருடம் சிறப்பாக செயல்பட்டால் உடனடியாக தேசத்திற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்து வருவது நிறைய அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இப்போதெல்லாம் உள்ளூரில் விளையாடுவதற்கு பதில் ஐபிஎல் தொடரில் 2 மாதங்கள் விளையாடி பல கோடிகளை சம்பாதித்து சிறப்பாக செயல்பட்டால் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்று விடலாம் என்ற எண்ணம் இளம் வீரர்களின் மனதில் ஆழமாக பதிய துவங்கியுள்ளது.

- Advertisement -

கபில் தேவ் கேள்வி:
அதை விட ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்கள் இந்தியா விளையாடாத சமங்களில் தங்களுடைய மாநில அணிக்காக உள்ளூரில் பெருமையுடன் விளையாடுவார்கள். அதே போல ஃபார்மை இழந்து தடுமாறும் போது உள்ளூர் போட்டிகளுக்கு சென்று சிறப்பாக விளையாடி விவிஎஸ் லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த கதைகள் ஏராளம்.

ஆனால் நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் விராட் கோலி 2019க்குப்பின் ஃபார்மை இழந்து 3 வருடங்கள் தடுமாறியும் ஒரு முறை கூட உள்ளூரில் விளையாடாமல் கடைசி வரை சர்வதேச அளவிலேயே விளையாடி சதங்கள் அடித்து கம்பேக் கொடுத்தார். அதே போல தற்சமயத்தில் தடுமாறும் ரோகித் சர்மாவும் உள்ளூர் போட்டிகளின் பக்கம் திரும்பாமல் கேப்டனாக இருப்பதால் தொடர்ந்து வாய்ப்பு பெற்று சர்வதேச அளவில் முக்கிய போட்டிகளில் சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைகிறார்.

- Advertisement -

மொத்தத்தில் ஃபார்மை இழந்தாலும் இந்தியாவின் போட்டிகள் நடைபெறவில்லை என்றாலும் இந்த 2 நட்சத்திர வீரர்களும் ஓய்வெடுக்கிறார்களே தவிர எப்போதுமே உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாடுவதில்லை. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் உள்ளூர் அளவில் விளையாடினால் தான் ஃபார்மையும் மீட்டெடுக்க முடியும் அந்த தொடர்களின் தரமும் உயரும் என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார்.

குறிப்பாக நட்சத்திர வீரர்கள் விளையாடும் போது அதை பார்த்து இளம் வீரர்களும் ஆர்வத்துடன் விளையாடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் சீனியர்கள் இளம் வீரர்களுக்கு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து அடுத்த தலைமுறையை வளமாக உருவாக்க உதவ முடியும் என்று தெரிவிக்கும் அவர் சமீப காலங்களில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா எத்தனை முறை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் தோல்வியை சந்தித்ததற்காக சஞ்சு சாம்சனை மட்டும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “உள்ளூர் கிரிக்கெட் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் சமீப காலங்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் வீரர்கள் எத்தனை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்கள்? இந்த சூழ்நிலையில் டாப் வீரர்கள் குறிப்பிட்ட அளவு உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க:IND vs IRE : அயர்லாந்து டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாக களமிறங்க வாய்ப்புள்ள 4 இளம் வீரர்கள் – லிஸ்ட் இதோ

“ஏனெனில் அப்போது தான் அவர்களால் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு உதவ முடியும். மேலும் சஞ்சு சாம்சனை மட்டும் தனியாக விமர்சிப்பது சரியல்ல. காரணம் நாம் ஒட்டுமொத்த இந்திய அணியை பற்றி பேசுகிறோம். இருப்பினும் மிகச் சிறந்த வீரராக அவரிடம் நல்ல திறமையும் இருக்கிறது. அவர் அதை தமக்குத்தாமே சரியாக பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement