IND vs IRE : அயர்லாந்து டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாக களமிறங்க வாய்ப்புள்ள 4 இளம் வீரர்கள் – லிஸ்ட் இதோ

RInku Singh Indian Team
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் ஏமாற்றமான தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. 2023 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் ஓய்வெடுக்கும் இந்த தொடரில் மீண்டும் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற முழுக்க முழுக்க இளம் வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது.

அவர்களை நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து கம்பேக் கொடுத்து கேப்டனாக வழி நடத்தி இந்தியாவின் வெற்றிக்கு போராட தயாராகியுள்ளது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அயர்லாந்து கத்துக்குட்டியாக பார்க்கப்படுவதால் இந்த தொடரிலும் 2024 டி20 உலக கோப்பைக்கு தேவையான இளம் வீரர்களை கண்டறியும் வகையில் புதிய வீரர்களுக்கு முதல் முறையாக வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. ரிங்கு சிங்: சிலிண்டர் விற்பவரின் மகனாக பிறந்து அடிமட்டத்திலிருந்து போராடி ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் 2018 முதல் பெஞ்சில் அமர்ந்து கடந்த வருடத்திலிருந்து அசத்திய இவர் இந்த வருடம் முதல் முறையாக பெற்ற முழுமையான வாய்ப்பில் 14 போட்டிகளில் 474 ரன்களை 149.53 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து மிகச் சிறந்த ஃபினிஷாராக செயல்பட்டார்.

அதிலும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் அடித்து வரலாறு காணாத வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் அழுத்தமான லோயர் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பான வெளிப்படுத்தியதால் அனைவரது பாராட்டுக்கு மத்தியில் இந்தியாவுக்காக முதல் முறையாக தேர்வாகியுள்ளார். எனவே 2024 டி20 உலகக்கோப்பையில் லோயர் மிடில் ஆர்டர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பினிஷர் தேவை என்ற சூழ்நிலை இருப்பதால் இவர் இத்தொடரில் அறிமுகமாக களமிறங்க 100% வாய்ப்புள்ளது.

- Advertisement -

2. ஜிதேஷ் சர்மா: மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் கிடைத்த வாய்ப்புகளில் அதிரடியாக செயல்பட்டார். அதனால் முழுமையான வாய்ப்பைப் பெற்று இந்த வருடம் 14 போட்டிகளில் 309 ரன்களை 156.06 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய இவர் சேவாக், கெவின் பீட்டர்சன் போன்ற முன்னாள் வீரர்களின் பாராட்டுகளுடன் இத்தொடரில் தேர்வாகியுள்ளார்.

சொல்லப்போனால் கடந்த ஜனவரியில் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் தேர்வான இவர் விக்கெட் கீப்பராக இருப்பதால் இத்தொடரில் சஞ்சு சாம்சன் சொதப்பும் பட்சத்தில் அறிமுகமாவதற்கு வாய்ப்புள்ளது. இல்லையென்றாலும் கூட சோதனை முயற்சியாக கடைசி 2 போட்டிகளில் அறிமுக தொப்பியை பெற்று இவர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது.

- Advertisement -

3. பிரசித் கிருஷ்ணா: கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 14 போட்டிகளில் 25 விக்கெட்களை எடுத்து அசத்திய நிலையில் காயத்தை சந்தித்து வெளியேறினார். குறிப்பாக ஆசிய கோப்பை போன்ற முக்கிய தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் காயத்தை சந்தித்த நிலையில் தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளார்.

எனவே உலகக்கோப்பை அணியில் பேக்-அப் பவுலராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் பும்ராவை போல அதற்கு தயாராகும் வகையில் இத்தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இதுவரை டி20 கிரிக்கெட்டில் விளையாடாத காரணத்தால் இந்த தொடரில் இவர் அறிமுகமாக களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

4. சபாஷ் அகமது: உள்ளூர் தொடரில் விளையாடி ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3 போட்டிகளில் விளையாடிய இவர் இதுவரை டி20 போட்டிகளில் அறிமுகமாக வாய்ப்பை பெறவில்லை.

இதையும் படிங்க:வெ.இ அணியை குறைச்சு எடை போட்டிங்க, இப்போவாச்சும் நீங்க யோசிக்குறது தப்புன்னு புரிஞ்சுக்கோங்க – கவாஸ்கர் விமர்சனம்

இருப்பினும் தற்போது ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்றவர்கள் ஓய்வெடுப்பதால் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவருக்கு இத்தொடரில் அறிமுக தொப்பியை பெற்று களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வாஷிங்டன் சுந்தருடன் 2வது சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இவர் தேர்வாக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement