வெ.இ அணியை குறைச்சு எடை போட்டிங்க, இப்போவாச்சும் நீங்க யோசிக்குறது தப்புன்னு புரிஞ்சுக்கோங்க – கவாஸ்கர் விமர்சனம்

SUnil Gavaskar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்தியா கடைசியாக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் 3 – 2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. முன்னதாக 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்று ஒரு காலத்தில் உலகையே மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் 21ஆம் நூற்றாண்டில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாததால் கத்துக்குட்டியாக மாறி வரலாற்றிலேயே முதல் முறையாக 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. அதனால் வெஸ்ட் இண்டீஸை குறைத்து மதிப்பிட்ட இந்திய அணி நிர்வாகம் இந்த சுற்றுப்பயணத்தில் பெரும்பாலும் இளம் வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்து அனுப்பியது.

குறிப்பாக தற்சமயத்தில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் என்ன செய்து விடப்போகிறது என்ற எண்ணத்தை கொண்ட இந்திய அணி நிர்வாகம் இந்த சுற்று பயணத்தை ஒரு சோதனை செய்யும் இடமாக பார்த்தது என்றே சொல்லலாம். அதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 தூண்கள் இருந்ததால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் வென்ற இந்தியா முழுவதுமாக இளம் வீரர்களுடன் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய டி20 தொடரில் சுமாராக செயல்பட்டு 2016க்குப்பின் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக முதல் முறையாக ஒரு டி20 தொடரில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:
அப்படி நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தற்சமயத்தில் பலவீனமாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை சந்தித்ததால் ரசிகர்களைப் போலவே வெங்கடேஷ் பிரசாத் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரில் 2 டி20 உலகக் கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸை குறைத்து மதிப்பிட்டதற்கான பரிசை இந்தியா பெற்றுள்ளதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

மேலும் அதற்காக அவமானப்பட வேண்டியதில்லை என்றாலும் ஐபிஎல் தொடரில் அசத்தும் இளம் வீரர்களால் சர்வதேச அளவில் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று விட முடியும் என்று கருத்தும் இந்திய அணி நிர்வாகத்தின் எண்ணம் பொய்யாகியுள்ளதாக அவர் சாடியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு வீரர் ஐபிஎல் அளவிலான அணிகளில் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் நாட்டுக்காக சர்வதேச அளவில் விளையாடும் போது வித்தியாசமான எதிர்பார்ப்பும் அழுத்தமும் இருக்கும்”

- Advertisement -

“குறிப்பாக ஐபிஎல் போன்ற தொடரில் ஒரு படி மேலே சென்று அசத்திய அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் காத்திருக்கும் முதல் படி செங்குத்தானதாக இருக்கும். இங்கே பலமுறை நாம் அண்டர்-19 அளவில் அசத்திய பையன்கள் சர்வதேச அளவில் அசத்த முடியாததை ஏன் பார்க்கிறோம்? ஏனெனில் குழந்தைகள் குழந்தைகளுக்கு எதிராக விளையாட முடியும். ஆனால் ஆண்களுக்கு எதிராக அவர்கள் விளையாடும் போது திடீரென அண்டர்-19 அளவில் விளையாடியதை விட சீனியர் அளவில் அதிக சவால் இருப்பதை உணர்வார்கள்”

“அதனாலயே சிறுவர்கள் மட்டத்தில் அழகாக தெரிந்த பலர் சீனியர் லெவலில் தேவையற்றவர்களாக காணப்படுகிறார்கள். அதற்கு பொறுமையையும் தாண்டி ஐபிஎல் போன்ற அணிகளில் இருக்கும் தரம் சர்வதேச அளவுக்கு நிகரானதை விட குறைவாக இருப்பதே காரணமாகும். அத்துடன் ஐபிஎல் தொடரில் கோடிகளுக்கு வாங்கப்பட்ட இந்த இளம் வீரர்களில் சிலர் வயிற்றில் உள்ள கொழுப்பை இழந்து பிற்காலத்தில் குறைந்த தொகைக்கு ஒப்பந்தங்களை நீட்டிக் கொள்வதில் மகிழ்ச்சியை காண்கிறார்கள்”

இதையும் படிங்க:அடப் பாவமே அதுக்குள்ள இப்படியா ஆகணும் – இங்கிலாந்தில் பிரிதிவி ஷா’க்கு ஏற்பட்ட பரிதாபம், ரசிகர்கள் ஏமாற்றம்

“வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஏற்பட்ட தோல்வி ஒரு குறையாக இருக்கக் கூடாது. அவர்கள் 2 டி20 உலக கோப்பையை வென்றவர்கள் என்பதையும் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளில் மேட்ச் வின்னர்களாக இருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள். எனவே உயர்தரமான டி20 அணியான அவர்களிடம் தோற்றத்தில் அவமானம் இல்லை. இருப்பினும் இந்தியா தனது பக்கத்தை வலுப்படுத்த வேண்டிய பகுதிகளை கண்காணித்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும். இந்த தொடரில் ஓய்விலிருந்த சிலர் நீண்ட காலமாக இருக்கப் போவதில்லை. எனவே அடுத்த டி20 உலகம் கோப்பைக்கு முன்பாக அவர்களுக்கு பதிலான மாற்று வீரர்களை விரைவாக கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement