துணை கேப்டன்னா என்ன? கேஎல் ராகுலை தேர்வு செய்த இந்திய அணியை விளாசும் கபில் தேவ் – பேசியது என்ன

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கியது. இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் லட்சியத்துடன் இந்தியா களமிறங்கியுள்ளது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் சொந்த மண்ணில் சந்தித்த தோல்விக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் களமிறங்கிய காரணத்தாலேயே ஆரம்பம் முதலே பிட்ச்களைப் பற்றி குறை சொல்லி வருகிறது.

அந்த நிலைமையில் நாக்பூரில் துவங்கிய முதல் போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் கேஎஸ் பரத் ஆகியோர் அறிமுகமாக வாய்ப்பை பெற்ற களமிறங்கினர். ஆனால் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்க போவது யார் என்ற கேள்வியில் துணை கேப்டனாக இருப்பதால் சுமாரான பார்மில் இருந்தும் கேஎல் ராகுல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்த அவர் 2022 ஜனவரிக்குப் பின் தடவலாக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

துணை கேப்டன்னா என்ன:
அதனால் அதிருப்தியடைந்த பிசிசிஐ ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய துணைக் கேப்டன் மற்றும் ஓப்பனிங் இடத்தை பறித்துக் கொண்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் சுமாராக செயல்பட்ட நிலையில் அதே தொடரில் முதல் முறையாக சதமடித்த சுப்மன் கில் சமீபத்திய இலங்கை மற்றும் நியூசிலாந்து வெள்ளை பந்து தொடர்களில் அபாரமாக செயல்பட்டு உச்சகட்ட பார்மில் இருக்கிறார்.

ஆனாலும் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக அவர் கழற்றி விடப்பட்டு ராகுல் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளது பெரும்பாலான ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. இந்நிலையில் துணை கேப்டனாக இருந்தால் அணியில் இருந்து நீக்கக்கூடாதா என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஏன் அவரை நீக்கக் கூடாது? அப்படி ஒன்றும் விதிமுறை கிடையாது. நீங்கள் எப்போதும் வெற்றிக்கு தேவையான அணியின் வளைவு தன்மையை மட்டுமே பார்க்க வேண்டும். அதை விட்டு இது போன்ற இல்லாத விதிமுறைகளை பின்பற்ற கூடாது”

- Advertisement -

“ஆரம்ப காலங்களில் இந்திய கிரிக்கெட்டில் துணை கேப்டன் இருந்தார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இப்போது சமீப காலங்களில் ஒவ்வொரு போட்டியிலும் புது புது துணை கேப்டன்கள் நியமிக்கப்படுகிறார்கள். கேஎல் ராகுல் மிகவும் இயற்கையான வீரர் நானும் அவரை மிகவும் விரும்புகிறேன். ஆனால் தற்சமயத்தில் அவர் அணிக்கு பொருந்தவில்லை என்றால் அவரை விட்டு விடுங்கள். எனவே எப்போதும் நமக்கு அணி தான் முக்கியமாகும். இது பற்றி கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் தான் முடிவு எடுக்க வேண்டும். தற்சமத்தில் சில வீரர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் ஒரு கட்டத்தில் ராகுல் டிராவிட்டும் விக்கெட் கீப்பிங் செய்த காரணத்தால் நிறைய போட்டிகளில் விளையாடினார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: வீடியோ : 2 ஆண்டுகள் கழித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட தோனி – என்ன பண்ணிட்டு இருக்காரு பாருங்க

முன்னதாக சமீப காலங்களாகவே ராகுல் போன்ற வீரருக்காக இளம் வீரர்கள் கழற்றி விடப்படுவது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது நிறைய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர் தொடர்ந்து வாய்ப்பு பெற்று வருவது கபில் தேவ் உட்பட பெரும்பாலான முன்னாள் வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதன் காரணமாக இந்த தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே மேற்கொண்டு வாய்ப்பு பெற முடியும் என்ற நிலைமையில் ராகுல் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement