2 ஆண்டுகள் கழித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட தோனி

MS-Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்திருந்தாலும் இன்றளவும் அவர் குறித்த செய்திகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று வருகின்றன. மேலும் சமூக வலைதளத்திலோ அல்லது பொது வெளியிலோ அடிக்கடி தோன்றி மக்களின் பார்வையில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை விட பொது பார்வையில் இல்லாத மகேந்திர சிங் தோனி குறித்து அவ்வப்போது வெளியாகும் செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும்.

அந்த வகையில் எப்போதாவது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பதிவிடும் தோனி தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து பதிவிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தோனி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் அவரது தோட்டத்தில் டிராக்டரின் உதவியுடன் பண்ணையில் வயலை உழவு செய்யும் ஒரு காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்த அவர் : புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டது என அவர் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் ஏற்கனவே தனக்கு தோட்டக்கலையில் ஆர்வம் இருப்பதை வெளிப்படுத்தியிருந்த தோனி தற்போது முழுநேர விவசாயியாக மாறி தனது பண்ணையை டிராக்டரின் உதவியுடன் உழுது கொண்டு உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு தங்களது லைக்குகளை கொடுத்தது மட்டுமின்றி பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

கடைசியாக 2021-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்த அவர் தனது பண்ணையில் பழங்களை பயிரிட்டு அதனை பறிப்பது போல வீடியோவினை பகிர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது உழவு செய்யும்படி ஒரு வீடியோவை அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வீடியோ : தப்பு கணக்கு போட்ட ஆஸ்திரேலியா, வேகத்தால் பறக்கும் ஸ்டம்ப்கள் – இந்தியா மிரட்டல் தொடக்கம்

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் 16-ஆவது ஐ.பி.எல் தொடரில் சென்னை சி.எஸ்.கே அணிக்காக விளையாட இருக்கும் தோனி இந்த ஆண்டுடன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று தெரிகிறது.

Advertisement