வீடியோ : தப்பு கணக்கு போட்ட ஆஸ்திரேலியா, வேகத்தால் பறக்கும் ஸ்டம்ப்கள் – இந்தியா மிரட்டல் தொடக்கம்

Shami Stumps
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 4 போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. கடந்த 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போடும் இந்தியா இந்த தொடரில் குறைந்தது 3 போட்டிகளை வென்று வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் லட்சியத்துடன் விளையாடுகிறது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடைசி 2 தொடர்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் பழி தீர்க்கும் எண்ணத்துடன் களமிறங்கியுள்ளது.

ஆனால் இயற்கையாகவே இந்தியாவில் முதலிரண்டு நாட்களுக்குப் பின் மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்ற நிலைமையில் கடந்த 2017 இந்திய சுற்றுப் பயணத்தில் பயிற்சி போட்டிகளுக்கு ஒரு வகையான பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் முதன்மைப் போட்டிகளில் சுழலுக்கு சாதகமான பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் ஸ்டீவ் ஸ்மித் கடந்த மாதம் விமர்சித்தார். அந்த நெருப்பில் முன்னாள் வீரர் இயன் ஹீலி கொஞ்சம் எண்ணெயை ஊற்றிய நிலையில் முதல் போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானத்தில் தங்களது அணியில் இருக்கும் 6 இடது கை பேட்மேன்களை இடது ஸ்பின்னர்களை வைத்து தாக்குவதற்காக வேண்டுமென்றே இருபுறங்களின் வலது பக்கத்தில் காய்ந்த தன்மையுடன் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக மீண்டும் குற்றம் சாட்டினார்.

- Advertisement -

தெறிக்கும் ஸ்டம்ப்கள்:
அதனால் இந்தியா வேண்டுமென்றே வெற்றி பெறுவதற்காக சுழலுக்கு சாதகமான மைதானத்தை உருவாக்கியதை கவனித்து ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் ஊடகங்களும் வசைபாடின. ஆனால் கடந்த மாதம் காபாவில் நடைபெற்ற போட்டியில் பச்சை புற்களுடன் 2 நாட்களில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த நீங்கள் இந்தியாவை பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்று சுனில் கவாஸ்கர் போன்ற இந்தியர்கள் பதிலடி கொடுத்தனர்.

அப்படி ஆரம்பத்திலேயே அனல் பறந்த இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நாக்பூரில் துவங்கியது. அதில் சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டிருந்ததால் ஆரம்பத்திலேயே பெரிய ரண்களை குவித்தாக வேண்டும் என்ற நிலைமை காணப்பட்டது. அதனால் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பட் கமின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் கேஎஸ் பரத் ஆகியோர் அறிமுகமாக களமிறங்கினர். அந்த நிலைமையில் துவங்கிய அப்போட்டியின் 2வது ஓவரிலேயே புதிய பந்தை ஸ்விங் செய்த முகமது சிராஜ் தொடக்க வீரர் உஸ்மான் கவஜாவை எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததால் இந்திய அணியினர் ரிவியூ எடுத்தனர். அதில் வந்து தெளிவாக ஸ்டம்புகளை அடிப்பது தெரிய வந்ததால் நடுவர் தனது முடிவை மாற்றி உஸ்மான் கவாஜா 1 ரன்னில் அவுட் என்பதை அறிவித்ததும் மைதானத்தில் இருந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களை மேலும் கொண்டாடும் வகையில் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஆஸ்திரேலியாவின் முக்கிய அனுபவ நட்சத்திர தொடக்க வீரரான டேவிட் வார்னரை முகமது ஷமி கிளீன் போல்ட்டாக்கினார். குறிப்பாக வார்னரின் தடுப்பாட்டத்தை தவிர்த்த முகமது ஷமி ஆஃப் ஸ்டம்ப்பை பறக்க விட்டதும் அதை ரவி சாஸ்திரி தனது கர்ஜித்த கூறுகளில் வர்ணனை செய்ததும் ரசிகர்களை மேலும் ஆரவாரப்படுத்தியது.

இதையும் படிங்க: வீடியோ : தப்பு கணக்கு போட்ட ஆஸ்திரேலியா, வேகத்தால் பறக்கும் ஸ்டம்ப்கள் – இந்தியா மிரட்டல் தொடக்கம்

அதனால் 2/2 என்ற மோசமான தொடக்கத்தைப் பற்றி ஆஸ்திரேலியாவை ஸ்டீவ் ஸ்மித் – மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி மீட்டெடுக்க போராடி வருகின்றனர். முன்னதாக நாக்பூர் பிட்ச் சொல்லுக்கு சாதகமாக உள்ளதாக தப்பு கணக்கு போட்டு இந்தியாவை கடுமையாக ஆஸ்திரேலியா தற்போது ஆரம்பத்திலேயே தங்களுக்கு கைவந்த கலையான வேகப்பந்து வீச்சில் திணறி வருகிறது. அந்த வகையில் அனைத்து விதமான மைதானங்களிலும் தங்களால் அசத்த முடியும் என்பதை இந்தியா நிரூபித்து வருகிறது.

Advertisement